உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

31

அகத்தியர் கோயிலே தமிழ்நாட்டு அகத்தியர் கோயில்களுள் பழமை வாய்ந்ததாகும் ஆகவே, இவரது திருவுருவம் சிவாலயங் களில் எழுந்தருளிவித்து வழிபாடு செய்யப்பட்டிருத்தல் ஒன்றே இவரது சிவபக்தியையும் பெருமையையும் நன்கு புலப் படுத்தும் எனலாம் .

இனி, சைவ சமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், சிவபெருமான் அகத்தியர்க்கு அருள் புரிந்த சிறப்பைத் திருநின்றியூர்ப் பதிகத்திலுள்ள ஒரு பாடலில் கூறியுள்ளனர். அது,

66

வந்தோ ரிந்திரன் வழிபட மகிழ்ந்து

வான நாடுநீ யாள்கென அருளிச்

சந்திமூன்றிலுந் தாபர நிறுத்திச்

சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்

சிந்துமாமணி யணுதிருப் பொதியிற்

சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்

செந்தண் மாமலர்த்த திருமகள் மருவுஞ்

என்பதாம்.

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.'

7. அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்னும் நூலைப்பற்றிய சில குறிப்புகள்;

இம்முனிவர்பிரான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூல் ப்போது காணப்படவில்லை. எனவே அந்நூல், ஒன்று இருந்ததோ இல்லையோ என்ற ஐயப்பாடு நிகழ்வது இயல்பே யாம். ஆனால் அந்நூல், தலை இடை கடை என்னும் மூன்று சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்ததென்று இறையனாரகப் பொருளுரை கூறுகின்றது. இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்தது என்று அவ்வுரை கூறுகின்ற தொல் காப்பியம் இப்போதும் இருப்பது யாவரும் அறிந்ததேயாம். அவ்வாறிருக்க, அவ்வுரையால் அறியப்படும் அகத்தியம் என்னும் நூல் இப்போதில்லாமையால் முன்பும் இருந்திலது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. தொல்காப்பியத்திற்கு உரைகண்ட ஆசிரியர் பலரும் தம் உரைகளில் அகத்தியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூல்

ம்