உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

மயிலைநாதர் உரையிலும், அந்நூல் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும், அவ்வுரையாசிரியர் எல்லோரும் தம் உரைகளில் பல அகத்தியச் சூத்திரங்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டி யுள்ளனர். புறப்பொருள் பன்னிரு படலப் பாயிரமும்,

வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்

தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்திய னென்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்’

என்று அகத்தியத்தைக் குறிப்பிடுவது உணரற் பாலதாகும் எனவே, அந்நூல் முற்காலத்தில் வழங்கி வந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க.

இனி, தொல்காப்பிய வுவமை யியல் இறுதிச் சூத்திரத்தின் உரையில், ‘அகத்தியனாராற் செய்யப் பட்ட மூன்று தமிழினும்' என்று பேராசிரியர் கூறியிருப்பதால், அந்நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணமாயிருந்தது என்பது நன்கு பெறப்படும். அன்றியும், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில், ‘ நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாயுள்ள தொன்நூல்களும் இறந்தன' என்று அடியார்க்கு நல்லார் உரைத் திருப்பதால் அவ்வுண்மை வலியுறுதல் காண்க. அகத்தியர்பால் இசைத் தமிழ் கற்ற சிகண்டியார் என்பார் 'இசை நுணுக்கம்' என்னும் நூல் எழுதியுள்ளனர் என்பது முன்னர் விளக்கப் பெற்றது. ஆகவே, அகத்தியனார் முத்தமிழிலும் புலமையுடையவர் என்பது வெளிப்படை எனவே, இம்முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் என்பது நன்கு துணியப்படும்

8. அகத்தியனாரும் கீழ்நாடுகளும்.

இந்தியாவிற்குக் கிழக்கேயுள்ள காம்போசம் (கம்போடியா), இந்துசீனம், ஜாவா என்ற நாடுகளில் அகத்தியரைப் பற்றிய செய்திகள் கிடைத்தலால் அந்நாடுகளுக்கும் இம்முனிவர்க்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. கி.பி. 732- ஆம் ஆண்டில் சஞ்சயன்