உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


வரையில்' என்னும் பழமொழியில் வைத்து இன்றும் பாராட்டப்பட்டு வருதல் காண்க. இவர்களது ஆட்சி. கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையில் தொண்டை மண்டலத்தில் நடைபெற்றது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர்கள் வடக்கேயுள்ள ஆந்திர நாட்டிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்: பின்னர் தொண்டை மண்டலத்தையும் பிடித்துக்கொண்டு அரசாளத் தொடங்கினர். பல்லவர்களும் தொண்டை மண்டலத்தை அரசாண்ட காரணம்பற்றித் தொண்டை மான்கள் என்றழைக்கப்பெற்றனர். கி.பி.830 முதல் 854 வரையாண்ட தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் மேற்பாடப் பட்ட நந்திக் கலம்பகத்திலும் அவ்வேந்தன் 'தொண்டையந்தார்' மன்னன் என்றும் 'தொண்டைமான்' என்றும் புகழப்பெற்றிருத்தலுக்குக் காரணம்இதுவேயாகும். பல்லவர்களது ஆளுகையும் தொண்டை மண்டலத்தில் கி.பி. 880-ல் முடிவெய்தியது. ஆயினும் கி.பி. 600 முதல் 880 வரை நிகழ்ந்த அவர்களது ஆட்சிக்காலம் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு சிறந்தபகுதியாகும். அக்காலத்தில் தமிழ்வேந்தர்களுள் ஒரு பகுதியினராகிய சோழர்கள் தம்நாட்டை இழந்து தாழ்ந்த நிலையை எய்தினர். பல்லவர்கள் நெடுமுடி வேந்தர்களாகவும் உள்நாட்டுத் தலைவர்களிடத்தும் திறைவாங்கும் பெருமையுடைய வர்களாகவும் விளங்கினர். அவர்களது ஆட்சிக்காலத்தேதான் சைவசமய ஆசாரியர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் முதலான பெரியோர்களும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் முதலான வைணவசமய ஆசாரியர்களும் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆகவே அப்பெரியோர்கள் எல்லாம் அரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்திச் சைவ வைணவ சமயங்களை வேரூன்றுமாறு செய்து அவற்றை எங்கும் பரவச்செய்த ஒருகால விசேடமென்று அப்பகுதியைக் கூறுவது சாலப் பொருந்துமென்க.

இனி, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது தொண்டை மண்டலம் பிற்காலச் சோழர்களுள் முதல்வனாகிய விஜயாலயனது புதல்வன் முதலாம் ஆதித்தசோழனால் வென்று