உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

71


எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு ஒரு சிவராத்திரியில் அவ்வூர்க்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள திருக்கோயில் பல கல்வெட்டுக்கள் நிறைந்த பழைமை வாய்ந்த கற்றளியாகக் காணப்பட்டது. அக்கல்வெட்டுக்களுள் இரண்டைப் படித்துப் பார்த்தபோது அத்திருக்கோயில் விசய மங்கலம், விசய மங்கை என்ற பெயருடைய தென்பது இனிது வெளியாயிற்று. எனவே கோவிந்த புத்தூரிலுள்ள அத்திருக்கோயில் திரு விசயமங்கை என்னும் பெயருடைய தென்பது நன்குணரப்பட்டது. பிறகு அத்தலத்திற்குரிய தேவாரப் பதிகங்களையும் பெரிய புராணத்தையும் ஆராய்ந்தபோது கல்வெட்டுக்கள் உணர்த்திய அவ்வரிய செய்தி அவற்றால் பெரிதும் உறுதியெய்திற்று. பின்னர் இத்திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை எழுதிவந்து வெளியிடவேண்டும் என்ற விருப்பத்துடன் காலங் கருதிக் கொண்டிருந்தேன். சென்ற கோடை விடுமுறையில் சில நண்பர்களுடன் அவ்வூர்க்குச் சென்று ஒரு நாள்முழுவதும் தங்கிச் சில கல்வெட்டுக்களை எழுதிவந்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் என்று கருதி அவற்றை இதுபோது வெளியிடலானேன்.

I

இடம்:- திருவிமானத்தின் மேற்புறம்

காலம்:- மதுராந்தக சோழனது 13ஆம் ஆண்டு

(1) ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பந்மற்குயாண்டு வது வடகரை ப்ர்மதேயம் பெ (2)ரிய ஸ்ரீவானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீவிஜயமங்கலதே (3) வதற்கு இஸ்ரீ விமானம் கல்லால் எழுந் தருளுவிச்சேன் ஸ்ரீ உத்தமசோழ தேவர் பெருந் (4) திறத்து குவளாலம் உடையான் அம்பலவன் பழுவூர் நக்கனானவிக்கிரம சோழ (5) ஸ்ரீமாராயனேன் இஸ்ரீவிஜய மங்கலத்து மஹாதேவற்கு:-

II

இடம்:-திருவிமானத்தின் மேற்புறம்

காலம்:- மதுராந்தகசோழனது 13ஆம் ஆண்டு