உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

79


படிக்கு ஒரு சில்லரையளும் வாராமல் புண்ணியத்தைப் பரிபாலனம் பண்ணி பூர்வாபூர்வம் நடந்தபடியே உத்தரோத்தரமாக நடப்பிக்கக்கட வோனாகவும். இந்தப்படிக்கு திருப்பெருந்துறை யாவுடைய பரமசுவாமியருக்கு அம்பலத்தாடும் பண்டாரத்தின் பாரிச மாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக் கெல்லாம் நாம் மனப் பூர்வமாக அபிமானிச்சு சருவமாண்ணிய மாக கட்டளையிட்டு தர்மசாதனப் பட்டயம் கொடுத்தோம். இந்த தர்மத்தைப் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கைக் கரையிலும் ஆதிசேதுவிலும் கோடி பிரும பிரதிட்டையும் கோடி சிவலிங்கபிரதிட்டையும் பண்ணின தர்மத்தை யடைவாராகவும். இந்த தர்மத்துக்கு யாதாமொருவர் விகாதம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையிலும் ஆதிசேது விலும் கோடி கோவை வதைபண்ணின தோழத்திலும் மாதா பிதாவைவதை பண்ணின தோழ்த்திலும் போவர்களாகவும்.

(ஒப்பம்) இந்த தர்மசாதனப்பட்டயம் எழுதினேன் கோவில் கணக்கு சித்திரபுத்திரன் மகன் அவாத்தரன் யெழுத்து.

யாதாஸ்து :- அசலாதிரவுமுன்புரம் தலப்பிர் உபதேச அவசரமாக பிரதிமையளும் பீடத்தின்... மும் எழுதியும் ரு... எழுத்துக்களையும்... கி மேலாக உ எழுத்துக்களையும் ஒட்டியும் ஓரங்களில் உ இடத்தில் வீரியும் நடுவில் இடத்தில் துவாரம் விழுந்தும் பாசிபுடித்துமிருக்கிறது மல்லாமல் மேற்படி பின்புறம் ரு வரிக்குமேலாக அ எழுத்து ஒட்டியும் கடைசியில் சூலமும் எழுதியிருக்கிறது. மன்னியில் இந்த நகல் முன்புறம் 31- ம் வரிக்கு மேலாக உ எழுத்து ஒட்டியுமிருக்கிறது.

(ஒப்பம்) வாதிக்காக கு.மா.கிருஷ்ண சாஸ்திரி வக்கீல்.

செப்டம்பர் மீ 1853 வருடம் செப்டம்பர் மீ15உதாக்கல்.

(ஒப்பம்) திரு.அதிசயம்பிள்ளை, முன்சீப்.

(True Copy)

(Signed). D.S.M. Grinfell. Ag.Sub. Judge.

Fileed on the 26th February 1859.

(True copy)