உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





“சதாசிவப் பண்டாரத்தார்
இதோ இருக்கின்றார், எங்கள் தமிழைக் காக்க...
உருப்படியா வரலாற்றை
உருப்படச் செய்தார்! ஈன்ற தமிழ்த்தாய் கோயிற் றிருப்படியில் தொட்ட தாள்,
எழுதுகோல் கடைசி வரை தீர்ந்த துண்டா?...

செந்தமிழ்ப் பேராசிரியர்;
வரலாற்றின் ஆய்வாளர்; புலவர் சென்றே
எந்த இடம் கேட்டாலும்
அந்த இடம் இந்த இடம் என்று காட்டும்
முத்து பேர் இலக்கியத்து
முழங்கு கடல் ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு!
நத்து தமிழ்ப் புலவர் குழு
மணிவிளக்குச் சதாசிவனார் மாண்டார் என்னே!

மறை மலைலயப் பறி கொடுத்தும்
மண வழகைப் பறி கொடுத்தும் வருந்தும் நாளில் துறைபலவும் ஆய்ந்த தமிழ்ச்
சோமசுந்தரத்தையும் நாம் பறிகொடுத்தோம்! இறைவர் அவர் இருந்த இடத்து
இவர் இருந்தார் என்று நாம் எண்ணும் போது
சிறியதொரு சாவு வந்து
பெரிய சதா சிவனாரைத் தீர்த்த தேயோ!”



‘பெரியார் குடில்’
பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.