உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


4. டு உகூ ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீவிக்கிரமா பரணச் சதுர்வேதி மங்கலத்து மேலைப்

5. பெருவழியில் ஸ்ரீராஜராஜதேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த

6. விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணணாரூரன் இவனே ஸ்ரீராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீரிறைப் பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் உ ‘ங' (குறுணி) ஆ

7. கத் திங்கள் க-க்கு நெல் *[1] (முப்பது கலமும் ஸ்ரீராஜராஜன் தண்ணீராட்டுவார்க்கு நிசதம் நெல்* (குறுணி) ஆக திங்கள் க்கு நெல்லு கலமும் இப்பந்தலுக்கு குசத்கலம் இடு.

8. வார்க்கு திங்கள் க-க்கு நெல்லு 3/4 (இருதூணி) ஆக திங்கள் (உ)க்கு நெல்லு கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டுதோறும் புதுக்குப் புறமாக வைச்ச

9. நெல்லு உ கலம் 3/4 (இருதூணி) ஆக நெல்* கலம் 3/4 (இருதூணி) இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறைத்திரவியமும் கிரையத்ரவியமும் கொண்டு இறை இழிச்சி....

இக்கல்வெட்டினால் பல செய்திகள் (South Indian Inscriptions Volume III No. 44) அறியக்கிடக்கின்றன. இதில் குறிக்கப் பெற்றுள்ள கோராஜ கேசரி வர்மன் இராஜராஜன் சுந்தரசோழன் என்று வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது மகன்; தஞ்சை மாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்த பெருமையுடையவன்; கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் சோழ மண்டலத்தையும் பிற மண்டலங்களையும் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பெருந்தகையாளன்; இவ்வேந்தனது திருப்பெயரால் இராஜராஜன் கிணறு அமைக்கப்பட்டது. sக்கிணற்றைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற


  1. இவ்விடத்தில் நெல்லையுணர்த்தும் குறியுள்ளது.