உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

||-

அப்பாத்துரையம் - 22

மாதரசியர், இளம் பெண்டிர் அவனுடன் மனம் விட்டு விளையாடினர்.அவனுடன் பழகுவதில் ஆடவரும் பெண்டிரும் எல்லையற்ற இன்பம் கண்டனர்.

அவன் கலைத்திற நுட்பநயங்கள், நடை நயங்களின்

பட்டியலை நாம் இங்கே முழுநிறைவாக எடுத்துக் கூறுவதானால், அவை வாசகர்களுக்குச் சலிப்பூட்டி விடும் என அஞ்சுகிறோம். வாழ்விலும் இந்நயங்கள் மற்றவர்களுக்குச் சலிப்பையே அளித்திருக்குமோ என்று கூட அந்தப் பட்டியல் எவரையும் எண்ணச் செய்துவிடும்! அவன் கவர்ச்சிகள் அவ்வளவு அதிகம் அவை பட்டியலில் அமையாதவை, பட்டியல் கடந்த உயிர்ப் பண்புடையவை.

-

இச்சமயம் கொரியா நாட்டவர் சிலர் தலைநகருக்கு வந்தனர். அவர்களிடையே சோதிடன் ஒருவனிருந்தான். ஏற்கெனவே பேரரசர் 'உடா' காலத்தில் அயல்நாட்டவர் அரண்மனை வருவதைத் தடைப்படுத்தும் ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சக்கரவர்த்தி அவர்களை அரண்மனைக்கு வரவழைக்கத் துணியவில்லை. ஆயினும் முழுதும் இரகசிய இரசியமாக, அவன் தங்கியிருந்த இடத்துக்கு அவர் இளவரசனை அனுப்பினார். வலங்கைத் துறைச் செயலாளர் வசம் அவனை ஒப்படைத்து, தம் மகனென்றே அவனை அறிமுகப்படுத்தும்படி சக்கரவர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

அவன் வருங்கால வாழ்க்கை பற்றி அறியும் ஆர்வம் அவருக்கு அவ்வளவு பெரிதாயிருந்தது!

சிறுவன் முகத்தின் ஒளிக்கோடுகள் கண்டு சோதிடன் பெருவியப்படைந்தான். அதே சமயம் அவன் அடிக்கடி தன் தலையை ஆட்டி முகத்தைச் சுளித்துக் கொண்டான். ‘ஒரு நாட்டாட்சியின் தலைமைக்கே உரிய குறிகள் இவ்விடம் உள்ளன. ஆனாலும் அதுவே அவன் வாழ்க்கைப் பாதையாய் அமைந்தால் கூட, ஒரு பெரிய வல்லரசனாய், உலகாளும் சக்கரவர்த்தியே யாகும் வரை அவன் எதிலும் அமைந்து நிற்கமாட்டான் என்று தெரிகிறது. அதே சமயம், ஊன்றிக் கவனித்தால் - அவன் ஆட்சியில் குழப்பமும் துயரும் உடன்தொடரும் என்று காண்கிறேன். இது மட்டுமன்று, இவ்வழி விடுத்து அரசியற்