உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 22

படிக்கட்டுகள் வழியாக முற்றத்தில் இறங்கி, அங்கிருந்து பேரரசருக்குச் செலுத்த வேண்டிய 'பெரும் பெயர் வணக்கம்' ஆற்றினார்.

இவ்விழாவிலேயே பேரரசின் இலாயத்திலுள்ள குதிரைப் பந்திகளும், பேரரசின் ஆடற்பருந்து மனையிலுள்ள ஆடற் பருந்து வரிசைகளும் கண்காட்சிகளாக அணியணியாகக் காட்டப் பட்டன. அவையனைத்தும் கெஞ்சி இளவரசனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளென்று பேரரச ஆணை பிறப்பிக்கப் பட்டது. பேரரசன் தவிசின் அடிப்புறத்திலே இளவரசர்களும் பேரவைப் பெருங்கோ மக்களும் தத்தமக்குரிய பரிசுகளைப் பெற வரிசை வரிசையாகக் காத்து நின்றார்கள். அத்துடன் அன்று முழுவதும் சக்ரவர்த்தியின் கட்டளைப்படி வலங்கைச் செயலாளர் பழக்கூடைகளையும் குடிகலங்களையும் எல்லாருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டே இருந்தார். தவிர, முற்றங்களில் எவரும் எளிதில் நடந்து செல்ல முடியாதபடி தின்பண்டப் பெட்டிகளும் பரிசுப் பொட்டலங்களும் எங்கும் சிதறிக்கிடந்தன.

பட்டத்து இளவரசன் அறிமுகவிழாவில்கூட இவ்வளவு தாராளமான பொங்கல் பெருவளம் காணப்பட்டதில்லை என்று பலரும் கூறிக் கொண்டனர்.

அன்றிரவு இளவரசன் கெஞ்சி தன் மாமனாரான அமைச்சரின் இல்லம் சென்றான். அங்கே அவன் மன்றல் நிறைவு விழா ஆடம்பரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அவ்வேளையில் இளவரசன் இன்னும் சிறு குழந்தைபோலவும், சிறிது உணர்ச்சிக் கோழையாகவும் நடந்து கொண்டானென்று கூறப்படுகிறது. ஆனால் அவன் கவினார்ந்த தோற்றம் வழக்கப்படி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திற்று. புது மணப்பெண் ஒருத்தி மட்டுமே அவ்வியப்பிலும் கவர்ச்சியிலும் மிகுதியாக ஈடுபடவில்லை என்று தோன்றிற்று. அவள் இளவரசனைவிட நான்குவயது மூத்தவள். அவனைச் சிறுபிள்ளையாகவே கருதியிருக்கக் கூடும். ஆகவேதான் அவனைக் கணவனாகக் கொள்ள வெட்கப் படுபவள்போல் அவள் காணப்பட்டிருக்க வேண்டும்.

ளவரசன் கெஞ்சி இன்னும் அரண்மனையிலேயே தங்கி வாழ வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பமாயிருந்தது. இது காரணமாகவே அவன் தனக்கென்று ஒரு மாளிகை