உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

41

அமர்த்திக் கொள்ளவில்லை. தவிர, அவன் உள்ளத்தின் ஆழ்ந்த அடித்தளத்தில் அவன் இன்னும் புஜித்சுபோ இளவரசியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுருவையும் வைத்துப் பூசிக்க எண்ணவில்லை. வேறு யாரையும்விட அவளே எவ்வளவோ உயர்பண்புடைவள் என்றுதான் அவன் இன்னும் எண்ணினான். அது மட்டுமன்று, புஜித்சுபோ இளவரசியைப் போன்ற வருடனேயே அவன் பழக விரும்பினான் - அதே சமயம் எவரையும் அவளுக்கு ஒருசிறிதும் ஒப்பாகவும் அவன் கருதவில்லை. அவளே அவன் உலகில் பண்புக்குக் கட்டளைக்கல் ஆனாள்.

மண உறுதி மூலம் அவனுடன் இணைக்கப்பட்ட நங்கையின் பெயர் ஆய் என்பது. அவளைப் பற்றி எல்லாரும் என்னென்னவோ புகழ் மாலைகளை அடுக்கி வந்தார்கள். ஆயினும் எக்காரணத்தாலோ இளவரசன் மட்டும் அவளிடம் எத்தகைய நற்பண்புகளையும் காண முடியவில்லை. நேர்மாறாக, அரண்மனையிலுள்ள நங்கை புஜித்சு போவே அவன் சிந்தையில் ஓயாது உலவினாள். ஆனால் புஜித்சுபோ பற்றிய சிந்தனை அவனுக்கு அமைதியை அளிக்கவில்லை. கடுந்துயரையே உண்டு பண்ணிற்று.

இப்போது இளவரசன் ஒரு முழுநிறை ஆடவனாய் விட்டபடியால், முதிராச் சிறுவன் என்ற முறையில் இதுவரை பெண்கள் பகுதிகளில் தங்கு தடையின்றித் திரிந்ததுபோல இப்போது திரிய முடியவில்லை. இப்பொழுது அவன் கால்கள் மனம்சென்ற திசையில் செல்லும் உரிமையை இழந்துவிட்டன. அரண்மனைக் கேளிக்கை வேளைகளில் மட்டும் பலருடைய யாழ்குழல் சை ஓசைகளுடன் கலந்து தன் உள்ளங்க கொள்ளைகொண்ட அணங்கின் இனிய குரலையும் கேட்பதால் அவன் ஓரளவு ஆறுதல் கொண்டான். எனினும் மொத்தத்தில் முழுநிறை ஆடவனானபின் அவன் வாழ்க்கை அவனுக்கு ஒரு தாங்க முடியாச் சுமை ஆயிற்று.

வழக்கமாக அவன் ஐந்தாறு நாட்கள் அரண்மனையில் கழித்தபின்னரே, ஒன்றிரண்டு நாட்களைத் தன் மாமனார் இல்லத்தில் இளவரசி ஆயுடன் கழிக்க முற்பட்டான். மனை வாழ்க்கையில் அவன் காட்டிய இந்தப் பராமுகத்தை அவன் புத்திளமையின் சிறுதவறு என்று மட்டும் கொண்டு, அவன்