உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

-

அப்பாத்துரையம் - 22

-

மாமனார் மனங்கோணாது அவனை எப்பொழுதும் இன்மு கத்துடன் வரவேற்றார். அது மட்டுமன்று, மாமனார் வீட்டில் பணியாட்கள், ஏவலர் முதற்கொண்டு அவன் யாவருமே வரவில் ஆர்வம் காட்டினர். அவன் வந்த வந்த சமயங் களிலெல்லாம் அவனுடன் பொழுது போக்கி அவனை மகிழ் வூட்டும் வகையில் பண்பார்ந்த குடிகளின் இளைஞர் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவனுக்காகவே அவன் மாமனார் வீட்டார் பெருஞ் செலவில் பலவகைக் கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முன்பு இளவரசன் கெஞ்சியின் அன்னைக்கு உரியன வாயிருந்த அறைகளில் ஒன்று 'ஷிகைசர்' என்பது. இப்போது அதுவே அரண்மனையில் இளவரசனுக்குரிய பணிமனை யிடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அவன் அன்னையிடம் முன்பு வேலைபார்த்த பணியாட்களையே இப்போது சக்கரவர்த்தி தேடித்திரட்டி அவன் பரிவாரமாக்கினார். அத்துடன் அவன் பாட்டியின் மாளிகை அழிவுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது கண்டு சக்கரவர்த்தி பேரரசின் பொதுப்பணி அரங்கத்தின் வாயிலாக அதைச் செப்பம் செய்து சீரமைத்தார். அம் மாளிகையைச் சுற்றி அமைந்திருந்த மர வரிசைகளும் குன்றுகளும் அவ்விடத்துக்கு எப்போதுமே இன்பகரமான தோற்றம் அளித்திருந்தன. இப்போது மாளிகையை அடுத்த ஏரியின் கரைகள் சீர் செய்யப்பட்டு அத்தோற்றம் இன்றும் அழகுபடுத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் கண்டும் கெஞ்சி ஒரு சிறிதும் மகிழ்வெய்தவில்லை. நேர்மாறாகத் துயரார்ந்த தொனியில் அவன் தனக்குள்ளே புலம்பினான். 'நான் விரும்பிய ஒருவருடன் மட்டும் இங்கே வாழக்கூடுமானால்..' அவன் விருப்பம் என்றும் நிறைவேறா விருப்பமாகவே நீண்டது.

கெஞ்சி இளவரசனுக்கு அளிக்கப்பட்ட ‘ஹிகரு' அல்லது 'ஒளிமிக்கவன்' என்ற புனைபெயர் பற்றிச் சிலர் வேறு வகையான ஒரு விளக்கம் தருகின்றனர். கொரியாவிலிருந்து வந்த சோதிடனாலேயே அது அவனுக்கு வழங்கப்பட்டது என்று அவர்கள் குறித்துள்ளனர்.