உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. முள் மரம்

ஒளி திகழ் கெஞ்சி...!

இத்தகு புகழ் பெயர் தாங்கிய எவரும் மக்கள் கண் ணொளிக்கோ, குறை காண்பவரின் ஓயாத் துளைப்புக்கோ எளிதில் தப்பி வாழ முடியாது. வரலாறு எங்கேனும் ஒரு சிறிது சறுக்கியதாகத் தோன்றினாலும்கூட, அதை ஒன்றுக்குப் பத்தாக்கிப் பின் சந்ததிகளுக்கெல்லாம் தெரியும்படி அவை பட்டவர்த்தனமாகப் பறைசாற்றிவிடும். மிக இரகசியமான செய்திகள் கூட வாயாடிகளின் வம்பளப்புக்கு இலக்காகி, அவனை ஊதாரி என்றோ உதவாக்கரை என்றோ வருங்காலங்கள் முடிவு செய்துவிட வழிசெய்யும், இவற்றைக் கெஞ்சி இளவரசன் நன்கறிந்தவன். ஆதலால் அவன் தன் செயல்கள் ஒவ்வொன்றிலும் மிகவும் விழிப்புடன் இருந்தான். இளமை விளையாட்டுகளில் கூட அவன் தனக்குரிய தன்மதிப்பையும் வெளித் தோற்றத்தையும் ஒரு சிறிதும் அப்பழுக்குப் படாமல் காத்து வந்தான். இக்காரணங்களால் நாம் அவன் புறவாழ்க்கையில் மிகுதி கொந்தளிப்பூட்டும் உணர்ச்சிக் குளறுபடிகள் காண்பதற்கில்லை. 'கதனோ நோ ஷோஷோ' போன்ற புத்தார்வ லீலா வினோதக் கதை ஆசிரியர்கள் அவன் வரலாற்றை உப்புச் சப்பற்ற வறட்டுக் கதை என்று கூறுவது இதனாலேயே...

ளவரசன் சில காலம் காவற் படைத் தலைவருள் ஒருவனாகப் பணி ஏற்றான். இச் சமயங்களில் தன் நேரத்தைப் பெரும்பாலும் அரண்மனையிலேயே கழித்து வந்தான். இதுகாரணமாக அவன் தன் மாமனார் வீடாகிய 'நெடுமாடத்’ துக்குப் போவது மிக அரிதாகவே இருந்தது. இதைக் கூட ஒளிவு மறைவான இரகசியக் காதல் உணர்ச்சியின் விளைவென்றே பலர் எண்ணினர். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. மற்றத் தோழர்களைப்போல அவன் காதல் விளையாட்டில் தலைகுப்