உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

63

'சின்னஞ்சிறு செய்திகளின் நிலையே இது. இவற்றுக்கு மேற் சென்று மனித இதயத்தையே மதிப்பிடத் தொடங்கினால். சமுதாயப் பாங்குகளுக்குரிய தோற்ற நடிப்புத் திறங்கள் வகையில் நாம் ஏமாற்றமடையாமல் இருக்க எவ்வளவு விழிப்பாயிருக்க வேண்டுமென்று கூறத் தேவையில்லை. பல செயற்கைத் திறங்கள், நடிப்புத் திறங்கள் புறவிழியை மட்டுமே கவரத்தக்கவை.

'சில நாட்களுக்கு முன்தான் இவற்றை நான் உணர நேர்ந்தது. நீங்கள் பொறுமையாகக் கேட்பதானால், நான் இவ் வரலாற்றை எடுத்துரைக்க முடியும்.'

இது கூறிக்கொண்டே அவன் சற்று அவர்கள் பக்கமாக நகர்ந்து உட்கார்ந்தான். இதே சமயம் கெஞ்சியும் விழித்துக் கொண்டான். தோ நோ சூஜோ கைமீது கன்னம் வைத்தவனாய் முழுதும் ஈடுபட்ட கவனத்துடன் அமர்ந்திருந்தான். உண்மையில் அன்றிரவு உமா நோகமி பேசியது முழுவதும் பொருத்த மற்றதாகவும், உலக வாழ்வு பற்றி ஒரு குரு மடத்துறவி உரைத்த சமய உரைபோலவும்தான் இருந்தது. ஆயினும் சிற்சில சமயங்களில் இத்தகு தறுவாய்கள் அவரவருக்குரிய சொந்தக் கருத்துகள் பற்றி வாதிக்கவும், உள்ளந் திறந்து ஒவ்வொருவர் தனிஇரகசியங்கள் எடுத்துரைக்கவும் எளிதாக உதவின.

உமா நோ கமி தொடர்ந்து பேசினான்,

அது என் இளமைக் கால நிகழ்ச்சி. என் நிலையும் இன்றைவிட அன்று தாழ்ந்தது. நான் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தேன்- அவளும் நான் மேலே கூறிய மெய்யான பாசமுடைய அணங்கு போன்றவளே. அவள் முழு நிறைவான கவர்ச்சி பொங்கி வழியும் ஒரு பேரழகியல்லள். ஆனால் என் இள உள்ளத்தின் தற்செருக்கு என்னையொத்த சிறந்த இளைஞனின் நிலையான மனைவியாகத் தக்க அத்தகைய அழகியாக அவளை ஏற்காவிட்டாலும், அந்நாளில் போதிய தற்காலிக நிறைவுடைய தாக அவளிடம் உள்ளம் ஈடுபடச் செய்தது. எனக்கு நேரம் போகாது தேங்கிய தறுவாய்களில் அவளைவிடச் சிறந்த தோழமை வேறு கண்டிருக்க முடியாது. ஆனால், அவள் எல்லையற்ற பொறுப்பற்ற தனம் உடையவளாகவே இருந்தாள். இந்தக் கொடுங் கண்டிப்பும் ஆர்வத் துடிதுடிப்பும் கொஞ்சம்