உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

65

ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த ஒன்றில் அவள் ஒரு சிறு முன்னேற்றமும் காட்டவேயில்லை. இறுதியில் எனக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. "ஆம். என்னை மகிழ்விக்கவே அவள் இவ்வளவு பாடுபடுகிறாள். இவ்வளவு வணக்க இணக்கமாகவும் இருக்கிறாள். இந்நிலையில் இவளுக்கு ஒரு படிப்பினை தந்து திருத்தும்படி, திடீரதிர்ச்சி தரும் ஏதேனும் செய்தாலென்ன? அதனால் தீராத இந்த நோய்க்கு ஒரு தீர்வு, அல்லது ஓர் ஓய்வு ஏற்படக்கூடும்" என்று எண்ணினேன்.

“என்னிடம் அவள் பாசம் வரம்பு கடந்ததாய் இருப்பதனால், அவளுக்கு இவ்வாறு பாடங்கற்பிக்க எண்ணும் போது, அதனால் எனக்குப் பெரு வருத்தம் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்; ஆனால், அதை அவளுக்காகப் பொறுத்துக் கொண்டு, உண்மையிலேயே அவளைத் துறந்து விடுவதாக நடிப்பதென்று தீர்மானித்தேன். இவ்வுட்கருத்துடன் முதலில் நான் உணர்ச்சியற்றவனாக நடித்துக் கடுமையாக நடந்து கொண்டேன். அதுபோது அவள் முற்றிலும் அமைதியிழந்து கடுஞ் சினங் கொண்டு எங்களைக் கண்டு சந்தி சிரிக்கும்படி ஆட்ட பாட்டங்கள் நடத்தினாள். இது கண்டு நான் அவளிடம் இறுதியாகக் கண்டிப்புடன் பேசினேன்.'

“உன்னிடம் எவ்வளவோ பாசம் வைத்திருக்கும் ஒருவனை உதறித் தள்ளிவிட எண்ணினால், இதுபோலக் காரியமல்லாத சிறு காரியங்களுக்கெல்லாம் பெருங் கூக்குரலிடு. இதுவே அதைச் சாதித்துக் கொள்வதற்குரிய நல்லவழி. நேர்மாறாக நீ என்னுடன் நீடித்து வாழவிரும்பினால், இப்படி நான் சிறிது பாசக் குறைவாயிருப்பதாக நீ எண்ணும்போதெல்லாம், உனக்கெதிராக நான் பெருஞ்சதி செய்கிறேன் என்று எண்ணிவிடக் கூடாது. இந்த ஒரு செய்தியை நன்றாகக் கருத்தில் பதிய வைத்துக் கொண்டால், என் அன்பு உன்னிடம் கட்டாயம் தொடர்ந்து நீடிக்கும். ஒரு வேளை உலகில் இன்னும் உயர்நிலைக்கு நான் மேம்பாடடையக் கூடும். அப்போது!"

'உணர்ச்சி வேகத்தில் நான் சிறிது முரட்டுத்தனமாகப் பேச நேர்ந்தாலும், மொத்தத்தில் திறமையுடனேயே காரிய மாற்றிய தாக எண்ணிக் கொண்டேன், அதற்கேற்ப அவள் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றிற்று. "குறைபாடுகளையும்

சிறு