உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

93

அவன் தமக்கையின் படுக்கை தாள் பலகணியின் எதிரிலுள்ள மூலையிலே இருந்ததாகத் தென்பட்டது.

சூஜோ எங்கே? எனக்குப் பயமாய் இருக்கிறது. என்னுடன் யாராவது பக்கத்தில் இருந்தால் நல்லது' என்று அவள் சிறிது உரத்துக் கூவினாள். பக்கத் தறையில் இருந்து பல குரல்கள் ஒருங்கே பதிலளித்தன. அது பணியாட்களின் அறை. 'அம்மணி, அவள் கீழ்மனையில் குளிக்கச் சென்றிருக்கிறாள்.விரைவில் வந்து விடுவாள்' என்றன அக் குரல்கள்.

எல்லாம் அமைதியான பின், கெஞ்சி மெல்லச் சென்று இடைக் கதவின் தாழை இப்பக்கம் மெள்ள விலக்கினான். தாழ் விலகியதே கதவை இழுக்க முயன்றான். கதவு மறுபக்கம் கொண்டியிடப் படவில்லை. அது எளிதில் திறந்து கொண்டது. அவன் நுழைந்தது ஓர் இடை வழி அறையே. அதன் ஒரு கோடியில் ஒரு திரையும் அதன் பின்னால் ஒரு மயங்கி விளக்கும் தெரிந்தன. அதன் அரை இருட்டிலே துணிமணிப் பெட்டிகளும், அணிமணிப் பேழைகளும், ஆடைகளும் அறையெங்கும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. அவற்றிடையே உன்னிப்பாக நடந்து சென்று கெஞ்சி குரல்கள் கேட்ட பக்கமிருந்த உள்ளறையை அணுகினான்.

அங்கே ஒரு சின்னஞ்சிறிய உருவம் பதுங்கிக் கிடந்தது. அவன் நுழைந்ததே அவள் தன்னை மூடியிருந்த போர்வையை அகற்றினாள். அதுகண்டு கெஞ்சி மலைப் படைந்தான். தான் வரவழைத்த பணி நங்கையின் வருகையே என்று அவள் கெஞ்சியின் வருகையை ஏற்றமைந்ததுதான் இவ் விசித்திர நிகழ்ச்சிக்குக் காரணம்.

நிலைமையை ஊகித்துக் கெஞ்சி துணிந்து பேசினான்.

'அம்மணி! நீ சூஜோவை அழைத்தது கேட்டேன். அவளுக்குப் பதிலாக நானே வந்து, நெடுநாள் உன்னிடம் உள்ளந்தரங்கத்தில் கொண்டிருந்த மதிப்பை உன்சேவையி லீடுபடுத்த எண்ணியிருக்கிறேன்' என்றான்.

மாதரசிக்கு இப்போதும் எதுவும் புரியவில்லை: அவள் மூளை குழம்பிற்று. அவள் உரத்துக் கூவ எண்ணினாள். ஆனால் தொண்டையில் குரல் எழ மறுத்தது. மேலும் குரல் எழுந்தாலும்