உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

95

அழைக்கப் பட்டிருந்த பணிப்பெண் சூஜோ அப்படுக் கையறைக்குள் வந்தாள். அது கண்ட கெஞ்சி திடீர் வியப்பால் கூவி விட்டான். தனது இடத்தில் யார் தான் நுழைந்திருக்கக் கூடுமென்ற மலைப்புடன் அவள் அவனை நோக்கித் தட்டித் தடவி வந்தாள். ஆனால், அடுத்த கணம் கெஞ்சியின் ஆடைகளுக்குரிய நறுமண வளத்தால் அவள் அவன் இளவரசனே என்று கணத்தில் ஊகித்துக் கொண்டாள். அதன் பின்னர் நடப்பது இன்னதென்று அவளுக்குப் புரியவில்லை ஆனாலும் வாய் திறந்து ஒரு சொல் கூற அவளுக்குத் துணிவு ஏற்படாது போயிற்று.

அவன் வேறு யாராவது ஒரு சாதாரண மனி தனாயிருந்தால், அவன் செவிகள் இப்போது அவள் கையில் இருந்திருக்கும். ஆனால், இச்சமயம் அதற்கு மாறாக அவள் உள்ளத்தில் இவ்வாறு ‘நினைவலைகள் வீசின. ‘ அவன் ஓர்

ளவரசன் என்பது ஒருபுறமிருக்கட்டும். நான் செய்யும் எத்தகைய கலவரமும் அந்த அளவுக்கு ஊர் வாயைக் கிளறி விடுவதாகவே முடியும் . ஆனால் இந்த அழகிய பெருமகனை, இளவரசனை நான் தொடுவதானால்..... அவள் படபடப்புடன், ஆனால் வாய் பேசாமல், கெஞ்சியின் அறைக்கே அவனைப் பின் தொடர்ந் தாள்.

அறைக்குள் நுழைந்ததுமே கெஞ்சி அவள் கண் முன்னே மெல்லக் கதவை அடைத்தான். அதே சமயம், 'நீ காலையில் வந்து உன் தலைவியை இட்டுக் கொண்டு போ' என்று கூறி அவளை அனுப்பினான்.

6

அணங்கின் பெயர் உத்சுசேமி. தன் பணிப் பெண் முன்னிலையிலேயேதான் இவ்வளவு எளிதாக முற்றிலும் கைப்பற்றப்பட்டது கண்டு அவள் வெட்கத்தால் உடல் குன்றினாள். பணிப் பெண்' தான் கண்டதைக் வைத்துக் கொண்டு தன்னைப் பற்றி இன்று என்ன நினைப்பாள், என்ன தான் நினைக்க மாட்டாள்' அவள் மனக்குழப்ப மடைந்து கலங்கினாள். ஆனால் கெஞ்சியின் நாத்திறம் எதற்கும்

எப்படியும் சரியான நம்பத்தக்க விடை கூறித் தற்காலிகமாக ஐயுறவு, தப்பெண்ணங்களை அகற்ற முற்பட்டது. எனினும் இந்நிறைவு ஒரு கணமே நிலை பெற்றது. அவள் உள்ளம் மீண்டும் மீண்டும் திடீர் திடீரென்று கலவர மடைந்தது.