உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

101

பேச்சுப் போக்கிலேயே மற்றும் செய்திகள் அறிய விரும்பினான். 'சரி, இப்புதிய அணங்கு மூலம் உங்களுக்குப் புதிய உடன் பிறப்புகள் ஏதேனும் உண்டா?' 'என்று வினவினான்.

கீ நோ கமி: இல்லை ஐயனே! அவளுக்கு மணமாகி இரண்டாண்டுகள் ஆய்விட்டன. ஆனால் குழந்தைகள் இல்லை. தன் திருமணத்தின் மூலம் அவள் தன் தந்தையின் ஆணையை மீறியதாகத் தெரிகிறது. இது அவளைக் கணவனிடமிருந்தும் விலகியே இருக்கத் தூண்டியதாக அறிகிறேன்.

கெஞ்சி: அப்படியா? இது வருந்தக் தக்க செய்தியே. அவள் தோற்றம் அப்படி மோசமானதல்ல என்று கேள்வி. அப்படித் தானே!

கீ நோ கமி: கணிசமான அளவில் மோசமல்ல என்று தான் கூறப்படுகிறது. ஆனால், எனக்கு அவளுடன் மிகுதி தொடர்பு கிடையாது.மாற்றாந்தாய்மாருக்கும் மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு அது பற்றிய பழமொழிக்கிணங்கச் சிக்கல் வாய்ந்ததேயாகும்.

ஐந்தாறு நாட்களுக்குப் பின் கீ நோ கமி சிறுவனை இட்டுக் கொண்டு வந்தான். அவன் அவ்வளவு பேரழகுடையவன் என்று கூற முடியாது. ஆனாலும் அவனிடம் போதிய கவர்ச்சி இருந்ததாகவே கெஞ்சி கருதினான். தனிச் சிறப்புக்குரிய தோற்றமும் அவனிடம் இருந்தது. இளவரசன் அவனிடம் அன்பாகப் பேசினான். மிக விரைவிலேயே அவனைக் தன் வயமாக்கிக் கொண்டான் தமக்கையைப் பற்றி கெஞ்சி கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு அவன் தன்னாலியன்ற பதில் கூறினான். ஆயினும் மொத்தத்தில் அவற்றால் நாணமும் குழப்பமும் அடைந்து அவன் நாத் தழுதழுத்தான். கெஞ்சி இப்போது நேரடிக் கேள்விகளை விடுத்துச் சுற்று வழியிலேயே வேண்டிய செய்திகளை அறிய முற்பட்டான்.

து சிறுவன்

உள்ளத்தில் மீண்டும் இன்னமைதி உண்டு பண்ணிற்று. மொத்தத்தில் செய்தி இன்னது என்பதைச் சிறுவன் அறிந்தாலும், அவனால் அதன் வளைவு நெளிவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை உணர விருப்பும் ஆர்வமும் அவன் இளவயதுக்கு அப்பாற்பட்ட தாயிருந்தது. ஆகவே தமக்கைக்குக்