உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

103

அங்கே போக வேண்டியதில்லை' என்றாள், ‘அதெப்படி? அவர் தான் என்னை வரச் சொல்லி யிருக்கிறாரே!' என்று பதிலளித்து அவன் சிட்டாய்ப் பறந்தான்.

மறுபுறம் கெஞ்சியும் பையனை அவன் காலதாமதத் துக்காகக் கடிந்து கொண்டான். “உனக்காக நான் நேற்று முழுவதும் காத்துக் கொண்டிருந்தேனே! பதில் கொண்டு வர மறந்து விட்டாயா? திரும்பி வரவே மறந்திருந்தாயா?' என்று கேட்டான். சிறுவன் முகம் நாணத்தால் சிவந்தது. அவன் நாவசையவில்லை, ‘சரி முடிவு என்ன? என்று கெஞ்சி மீண்டும் கேட்டான்.

‘அங்கே இத்தகைய கடிதங்களை வாசிப்பவர் எவரும் கிடையாது' என்று கூறினான்.

‘என்ன பித்துக் கொள்ளித்தனம்; இத்தகைய சொற்களால் என்ன பயன்!' என்று எரிந்து விழுந்த வண்ணம் கெஞ்சி மீண்டும் ஒரு கடிதம் எழுதி அதைப் பையனிடம் கொடுத்தான். உனக்குத் தெரிந்திருக்க வழியில்லை என்று நினைக்கிறேன். உன் தமக்கைக்குத் திருமணமாகுமுன் நான் அவளை அவ்வப்போது சென்று சந்தித்ததுண்டு. ஆனால், நான் கையாலாகாத, ஆளற்ற ஜீவன் என்று நினைத்து இப்போது இவ்வளவு ஏளனமாக நடத்துகிறாள்.ஆயினும் நீ இனி என் பிள்ளையாகவே இருப்பாய் என்று நம்புகிறேன். எப்படியும் அங்கே அவர் வயதானவர் உன்னைப் பேணிக் காக்க நெடுநாள் இருக்க மாட்டார்’ என்று அவனிடம் பேசினான்.

இந்த விளக்கமே சிறுவனுக்குப் போதிய மன நிறைவு அளித்தது. அத்துடன் இதன்மூலமே அவன் உள்ளத்தில் கெஞ்சி பற்றிய மதிப்பு முன்னிலும் பன் மடங்காயிற்று. இளவரசனும் எப்போதும் அவனைத் தன்னை விட்டு விலக விடாமல் உடன்கொண்டு, அரண்மனைக்குப் போகும்போது கூட அவனை இட்டுக் கொண்டே சென்றான். தவிர அரண்மனை அகத்துறை முதல்வனிடம் பரிந்துரைத்து, அவனுக்குத் தக்கதாக ஒரு சிறிய அரண்மனைப் பணியாடையே தைத்தளித்தான் உண்மையில் சிறுவனை அவன் தன் சொந்தப் புதல்வனைப் போலவே அன்பாதரவுடன் நடத்தி வந்தான்.