உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

||-

அப்பாத்துரையம் - 22

இதனால் அந்த இள ள உள்ளம் புண்பட்டது. பகல் முழுவதும் அவன் தனியே யிருந்து வருந்தினான்.

கெஞ்சியிடமிருந்து மீண்டும் பதில் வராததனால் அவன் மனமாற்றம் அடைந்து விட்டான் என்று உத்சுசேமி எண்ணினாள். அவன் மீண்டும் வலியுறுத்தியிருந்தால் அவள் சீற்றம் கொண்டே யிருப்பாள், அதே சமயம் அவ்வளவு எளிதாக அவன் தோல்வியை ஏற்றதும் அவளுக்கு அமைதி தரவில்லை,

எப்படியும் அவனுக்குகெதிராகத் தன் உள்ளக் கதவை அடைத்துத் தாழிடுவதற்கு இதைவிட நல்ல தருணம் வேறில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அதை வெற்றிகரமாக ஒப்பேற்றி விட்டதாகவும் எண்ணினாள். ஆனால் இதன் பின்னும் அவள் எண்ண அலைகளில் பெரும்பாலானவற்றிலும் அவன் நிழலன்றி வேறெதுவும் படரவில்லை என்பது கண்டாள்.

மற்றொருபுறம் வேதனைக்குரிய இந்தக் காரியத்தை முற்றிலும் மறந்துவிடுவதே நலம் என் று கெஞ்சி துணிந்திருந்தான், ஆனால் இது செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை. இறுதியில் இந்த ஊசலாட்ட நிலையைப் பொறுக்க மாட்டாமல் மீண்டும் சிறுவனையே அணுகினான், ‘என் துன்பம் பெரிது. வேறு செய்திகளிலேயே கருத்துச் செலுத்த நான் எவ்வளவோ முயல்கிறேன். ஆனால் என் உள்ளம் என் கட்டில் இல்லை. இனி இவ்வேதனையுடன் என்னால் மல்லாட முடியாது.நீ எப்படியாவது தக்க சமயம் பார்த்துக் காத்திருந்து, உன் தமக்கையினிடம் என்னைக் கொண்டு சேர்த்துவிட வேண்டும்' என்றான்.

சிறுவனுக்கு இப்போது பெருத்த சஞ்சலமாயிற்று. ஆயினும் கெஞ்சி தன்னிடம் வைத்த ஆழ்ந்த அந்தரங்க நம்பிக்கை கண்டு அவன் உள்ளூரப் பெருமையும் எக்களிப்பும் கொண்டான்.

அவர்கள் ஆவலுடன் காத்து எதிர்பார்த்திருந்த சந்தர்ப் பமும் விரைவிலேயே அவர்களுக்குக் கிட்டிற்று.

கீ நோ கமி புற மாகாணங்களுக்குச் செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே மனையில் பெண்டிர் மட்டுமே இருந்தனர்; ஒரு நாள் மாலையில் தெருக்களிலெல்லாம்