உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122) ||____

அப்பாத்துரையம் - 22

அவன் சொற்களின் கடுமையும் உறுதியும் கண்டு சிறுவன் தேற்றுவாரற்ற தனிமைத் துயரில் மாழ்கினான்.

சிறிது நேரம் இருவரும் ஓய்வு கொண்டனர். ஆனால் கெஞ்சி கண்ணுறங்கவில்லை. விடிந்ததும் அவன் அவசர அவசரமாகத் தன் எழுத்துவேலைக் குரிய மைக்கோல் கொண்டு வரும்படி கூறினான். இன்று அவன் முறையான கடிதம் எழுதவில்லை. மடித்த தாள்நறுக் கொன்றில் ஏதோ கிறுக்கினான். அது பள்ளிச் சிறுவர் கைவரிப் பாடம் போல இருந்தது. அதில் அவள் தான் மறைந்தோடும் போது நழுவ விட்ட கைச்சதுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டான். ' ஆற்றருகே மரத்தடியில் பொன்சிறை வண்டு உதிர்த்த மென்சிறகு போன்ற' தென்று அதை அவன் தன் பாடலில் வருணித்தான்.

சிறுவன் இக்கடிதத்தை எடுத்துத் தன் ஆடையின் மடிப்பில் செருகிக் கொண்டான்.

உத்சுசேமியின்

தோழி இப்போது

என்ன

உணர்ச்சிகளுடன் இருப்பாளோ என்று கெஞ்சி ஒரு கணம் கவலைப்பட்டான் . ஆனால் சிறிது சிந்தித்தபின் அவளுக்கு எச்செய்தியும் அனுப்பா திருப்பதே நன்று என்று கருதினான்.

கைச்சதுக்கத்தில் அதை அணிந்த அணங்கின் மென்மணம் என்றும் நீங்காமலே இருந்தது. அதை இதன் பின்னும் மிகப்பல நாட்கள் கெஞ்சி தன் உள்ளாடைக்குள்ளேயே அணிந்திருந்தான்.

சிறுவன் மனை சென்ற போது அவன் தமக்கை சிடு சிடுத்த முகத்துடன் அவனை எதிர்பார்த்திருப்பது கண்டான். ' நீ எனக்கு வெட்டிவைத்த படுகுழி எத்தகையது என்று தெரியுமா உனக்கு? அதிலிருந்து நான் தப்பியது உன்னாலல்ல - அப்படியும் என் தோழிக்கு நான் என்னதான் விளக்கம் கூறமுடியும்? இள வரசனிடம் தான் உன்மதிப்பு இப்போது என்ன வாயிருக்க முடியும் எப்பேர்ப்பட்ட குறளிக்கோமாளிக் கூத்தனாக அவர் உன்னைக் கருதியிருப்பார்! நீ பிறந்த பிறப்பில் உனக்கு இப்போதாவது வெட்கம் ஏற்பட்டிருக்குமென்று எண்ணுகிறேன்’ என்றாள்.

-

இரு சார்பிலும் இவ்வளவு தகுதியற்ற கடுமையுடன் நடத்தப்பட்டும் சிறுவன் மனமுடையவில்லை. பாடலுடன் கூடிய