உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150 |

அப்பாத்துரையம் - 22

அவர்கள் எண்ணினர். ஆனால் அக்கதை துயர மிக்கதாக முடிவுற்றதை நினைத்து வேண்டுகோளை அவர்கள் மாற்றிக் கொண்டனர். “புத்தர் பிரான் மீட்டும் உலகில் மைத்திரேயராய் பிறக்கும் காலம் வரை எங்கள் காதல் நீடிக்குமா!”என்று அவர்கள் தம் நேர்வு தெரிவித்தனர். ஆனால் இன்னும் கெஞ்சியினிடம் அவள் கொண்டிருந்த ஐயுறவச்சம் முற்றிலும் அகலவில்லை. இதனைத் தன் எதிர் பாடலில் அவள் குறித்தாள்.

'இவ்வுலகில் துன்பத்தில் நைவேன்யான் அவ்வுலகில் இன்ப அவாக் கொள்வதெவ் வாறு?'

அவள் பாடல் ஓரளவு தொடக்கப் பயிற்சியாளர் நிலையிலேயே இருந்தது.

காலையில் மேல் வானில் சாயும் வெண்மதி போகும் வழியில் எழிலொளி தரும் என்று அவள் மகிழ்வுடன் எதிர்பார்த்தாள். கெஞ்சியும் இதுவே எதிர்பார்த்ததாகக் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் நிலா ஒரு பெரிய முகிற் பிழம்பின் பின் சென்று மறைவுற்றது. ஆனால் இதனாலும் எதுவும் கெடவில்லை. கீழ் திசையின் விடியல் வெள்ளொளி பேரழகுக் காட்சியாய் அமைந்தது. முற்றிலும் பகலொளியாகு முன் போய்விட வேண்டுமென்ற அவசரத்துடன் அவன் அவளை விரைவில் வண்டியிலேற்றி உகானையும் அவள் அருகே அமர்த்தினான்.

சிறிது தூரத்திலிருந்த ஓர் ஆளற்ற மாளிகை நோக்கி அவர்கள் சென்றார்கள். மனைக் காவலன் வருவதற்குக் காத்திருக்கும் சமயம் கெஞ்சி சுற்றுப் புறங்களை நோக்கினான். வாயில்கள் தகர்ந்து பொடிந்து கொண்டிருந்தன. மூடுபனி செறிந்து விழுகின்ற பனித்துளிகளின் பளுவைப் பெருக்கிற்று. கெஞ்சி வண்டியின் திரையைச் சிறிது விலக்கிப் பார்த்த ஒரு கணத்துக்குள்ளாக அவன் கையுறையின் நுனிகள் முற்றிலும் நனைவுற்றன. அத்தனை துயரார்ந்த காட்சி தரும் வாயிலைக் கெஞ்சி இதற்கு முன் கண்டதேயில்லை. நாணற்புல் அவற்றைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

இத்தகைய ஓர் அரு நிகழ்ச்சி என் வாழ்வில் இது வரை

நிகழ்ந்ததில்லை. இயல்பாக, இதனால் என் நெஞ்சு