உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 22

துவரை அவள் கனவிலும் காணாத, காண எதிர்பாராததாய் இருந்தது.

'நம்மிடையே உள்ள இந்தத் திரையை விலக்கும் வரை நான் விரும்பியவற்றை யெல்லாம் நீ வெளியிடாததில் நான் வியப்படையவில்லை. ஆனால் இப்போது நீ உன் பெயரும் விவரமும் கூறாமல் இருந்தால் அது அன்பற்ற செயலாகவே அமையும்' என்று பேசி, அவளைப் பற்றி அறிய முயன்றான் அவன்.

'நான் பாடலில் வரும் மீனவ நங்கையைப் போன்றவள். எனக்குப் பெயரில்லை. வீடில்லை,' என்று அவள் முனகினாள். அவனைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றதற்காக அவள் மகிழ்ந்தாள். அவன் யார் என்று அறிந்ததனால் ஆறுதல் அடைந்தாள். ஆயினும் தான் யாரென்று அப்போதும் அவள் கூற விரும்பவில்லை. அவனும் நெடிது வற்புறுத்தவில்லை. ‘சரி, உன் விருப்பப்படியே' என்று விடுத்தான். ஆயினும் இதனால் அவன் ஒரு சிறிது மனக்கசப் படையாம லில்லை.

இந்த வேறுபாடு விரைவில் அகன்றது. பகலும் கழிந்தது.

இச்சமயம் கோரெமிட்சு அங்கே வந்து அவர்களுக்குப் பழங்களும் பிற உணவு வகைகளும் அளித்தான். அவன் அறைக்குள்ளே வர மறுத்தான். ஏனெனில் உகானைக் காணவே அவன் தயங்கினான். அவள் தலைவியை இட்டுக் கொண்டு வந்ததில் உடந்தையாய் இருந்ததற்காக அவள் தன்னைக் கடிந்து கொள்வாளே என்று அஞ்சினான்.

தான் ஒரு சிறிதும் கண்டு கொள்ளாத உள்ளார்ந்த கவர்ச்சிகள் நங்கைக்கு இருத்தல் வேண்டுமென்ற முடிவுக்கு இப்போது கோரெமிட்சு வந்திருந்தான். இல்லை யென்றால் அவளை அடையக் கெஞ்சி இவ்வளவு பெருந் தொல்லைகளை மேற்கொண்டிருக்க மாட்டான் என்று அவன் எண்ணினான்.தன் பெருந்தன்மை பற்றியும் இப்போது அவன் மன நிறைவு கொண்டிருந்தான். தனக்குள் தானே மகிழ்ந்து கொண்டான். ஏனெனில் அவன் அவளைத் தனக்கே உரிய பரிசாக வைத்துக் கொண்டிருக்க முடியும். அவ்வாறு இருக்கவில்லை. அதைத் தன் தலைவனுக்கே விட்டுக் கொடுத்திருந்தான்.