உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

‘பனிபெய்யும் அகல் வெளியில் செல்லும் வழிப்போக்கன் தனிஇரவில் தங்குமலைத் தழைப்பாசி மீது

நனி உறையும் அவர்வாழ்வு நுனித்தறிதல் ஆமோ?'

(209

உவமைக்கு உவமையாகவே, அவன் குறித்த பொருள் வேறுபடும்படி. தீங்கற்ற முறையிலே எதிர்பாடல் அமைந் திருந்தது. இந்த மறுமொழி கிட்டியபின், கெஞ்சி வேறு வழியில் இப்போது வேண்டுகோளை வற்புறுத்தினான். 'இப்படிச் சுற்றுவழியில் உரையாடல் நடத்தி எனக்குப் பழக்கமில்லை. உங்கள் தலைவி எவ்வளவு கூச்சமுடையவளானாலும், இச்சமயம் ஆசாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இதுபற்றி நேரிடையாக என் வாதங்களைக் கேட்டுப் பதில் அளிக்கும்படி வேண்டுகிறேன்.' என்றான்.

துறவு நங்கை இப்போது மனக் குழப்ப மடைந்தாள். 'யார் இப்படி இவருக்குத் தவறான தகவல் கொடுத்திருக்க முடியும்? என் பேர்த்தி ஒரு வளர்ந்த இளம் பெண் என்றே அவர் மதிப்பதாகத் தோற்றுகிறது என்று அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். இவ்வளவு புகழும் பேரும் உடைய ஒருவர் நேரடியாக வரும்படி கட்டளையிடும் போது, எப்படி மீறிச் செல்வது என்றும் அவள் அஞ்சினாள். செல்லாமல் எப்படி என்ன சாக்குப் போக்குக் கூறமுடியும் என்றும் தெரியாமல் அவள் விழித்தாள். ஆனால் போகாமலிருந்தால் கெஞ்சி எப்படியும் மனம் புண்பட்டு வருந்தக்கூடும் என்று பணிப் பெண்கள் எடுத்துரைத்தார்கள். ஆகவே இறுதியில் அவள் பண்கள் பகுதியிலிருந்து பகுதியிலிருந்து வெளிவந்து பேச

இணங்கினாள்.

'நான் இளம் பெண்ணல்லவானாலும் இப்படி வந்து பேசுவது தகுமோ என்று அஞ்சுகிறேன். ஆயினும், உங்கள் காரியம் முக்கியமானதென்று நீங்கள் கூறியனுப்பியதனால், நான் மறுக்கத் துணியவில்லை' என்று அவள் தொடங்கினாள்.

'ஒரு வேளை என் கோரிக்கை காலமல்லாத ஒன்று அல்லது அரைகுறை ஆர்வத்துடன் செய்யப்படுவது என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால் இது என் முழு மனமார்ந்த விருப்பமே யாகும். புத்தபகவான் சான்றாக....."