உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214

-

அப்பாத்துரையம் - 22

வருங்கால வாழ்வில் தீங்கெல்லாம் அகற்றத் தக்க ஆற்றலுடைய ஒரு மாத்திரைக் கோலை அவர் கெஞ்சிக்கு அளித்தார். அதைக் கண்ட துறவு நங்கையின் உடன் பிறப்பாளர் கொரியாவிலிருந்து தாம் திரும்பிவரும் சமயம் சோதோகு இளவரசன் தமக்களித்த மணிமாலையை அவனுக்குப் பரிசாகத் தந்தார். அது மரகத மணிகள் கொண்டு இழைக்கப்பட்டிருந்தது. அது வைக்கப்பட்டிருந்த சீனப் பெட்டி கூட அதனுடனே அந்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவே யிருந்தது. பெட்டி சிறந்த பணியிட்டுச் செய்த ஒரு பையில், ஐந்திலை கொண்ட ஒரு செந்தூரக் கொம்புடன் இணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனுடன் மருந்துகள் வைப்பதற்குரிய நீலப்பளிங்குப் புட்டில்களையும் நறுமணமிக்க மருந்துப் பூண்டுகளையும் பிற மலைப் பொருள்களையும் உடனளித்தார்.

மலைவாணர் தனக்கு அளிக்கும் பரிசுகளுக்கு எதிர் பரிசில்கள் வழங்கும் வண்ணம் கெஞ்சி தலை நகரிலிருந்து பல பொருள்கள் வரவழைத்திருந்தான். முதலில் துறவிக்குரிய பரிசளித்தபின், தன் பேரால் தொழுகையாற்றிய துறவிகளுக் கெல்லாம் திருவமுதளித்தான். அயலிடத்திலுள்ள ஏழைச் சிற்றூர் வாணர்களும் பல பயன் தரும் நன்கொடைகள் பெற்றனர்.

முன்னேற்பாடாக,

திருமறை

புறப்படுவதற்குரிய ஏட்டிலிருந்து சில பகுதிகளை அவன் வாசித்துக் கொண்டிருந் தான். அச்சமயம் முதிய துறவி மனைக்குள் சென்றார். தன் தங்கையாகிய துறவு நங்கையிடம், 'இளவரசனுக்கு ஏதாவது செய்தி தெரிவிக்கவேண்டுமா?' என்று கேட்டார். 'தற்போது எதுவும் கூறுவது அரிது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழிந்தபின்னும் இதே விருப்பம் அவருக்கு இருக்குமானால், அது பற்றி ஆலோசிக்கலாம் என்று கூறுங்கள்’ என்றாள். ‘அதுவே நானும் நினைப்பது' என்றார் அவர்.

தன் ஆவல் ஈடேறும் வகையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காணக் கெஞ்சி மனம் அழுங்கினான். துறவு நங்கையின் செய்திக்கு மறுமொழியாகத் துறவியின் மனையிலேயே வாழ்ந்த ஒரு சிறுவனிடம் ஒரு பாடலை வரைந்தனுப்பினான்.