உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

219

ஆண்டு மேல் ஆண்டாக நமக்கிடையே சமரசமில்லாமலே போய்க் கொண்டிருக்கிறது. முன் என்றும் இருந்ததைவிட இப்போது நாம் வேறு வேறாகப் பிரிவுற்று வாழ்கிறோம். எப்படியோ சாதாரண முறைத் தொடர்பாவது நம்மிடையே நிலவ முடியாதா? நெடுநாள் நான் உடல் நலமில்லாமல் இருந்தேனே, நீ என் உடல் நலம் பற்றிக் கூடக் கேட்கவில்லையே! இது எவ்வளவு விசித்திரமான நிலை? ஒருவேளை இதுவே என் தகுதியாக இருக்கக்கூடும். ஆனாலும் இது மிகவும் வேதனை தரத்தக்கதேயாகும்' என்றான்.

‘ஆம், மனிதரைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாவிட்டால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும்.' என்று அவள் தோளைக் குலுக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டே கூறினாள். ஏளனமும் இறுமாப்பும் கலந்த அந்தத் தோற்றத்திலும்கூட அவள் அழகு தனிச்சிறப்புடையதாகவே விளங்கிற்று.

கெஞ்சி மனவெறுப்புடன் பேசினான்.

‘நீ என்னுடன் பெரும்பாலும் பேசுவதேயில்லை. தவறி வாய் திறக்க நேர்ந்தால் ஏதாவது கடுமொழிதான் கூறுகிறாய். நான் கூறும் நல்ல செய்திகளையும் திரித்து அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறாய். உன் மனக்கசப்பைத் தணித்து உள்ளே மகிழ்வித்து இன்னுரையாட வைக்க நான் முயன்றால், நீ அதனாலும் முன்னிலும் அணுக முடியாதவளாகி விடுகிறாய். உன் உள்ளம் என்னை உணரும் நாள் என்றேனும் வருமா?.' என்று கேட்டுக் கொண்டே, அவன் அவள் படுக்கையறை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவள் அவனை அங்கே பின் தொடரவில்லை.

அவன் உள்ளம் வெம்பி வெதும்பிற்று. சிறிது நேரம் அவன் மிகுந்த மனவருத்தத்துடன் படுக்கையில் தங்கியிருந்தான். ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. ஏனெனில் உள்ளூர அவன் அவள் விருப்பு வெறுப்புகள் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. அவன் கண்கள் அயர்வுற்றன. அவன் சிந்தனைவேறு எங்கெல்லாமோ அரையுணர்வில் சுழன்றன. தான் கண்ட சிறுமியைத் தன்னிடமே கொண்டு வந்து அவள் பருவமடைவதைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆர்வமே அவனை இச்சமயம் ஆட்டிப் படைத்தது. ஆனால் அவள் பாட்டி சொன்னது சரி என்று இப்போது அவனுக்குத் தென்பட்டது. அவள் மிகவும் சிறு