உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

அப்பாத்துரையம் - 22

'இளந்தளிரைப் பேணுபவர் இனியாரோ என்றே

உளங்கவன்று வானொளியில் கலவாமல் நின்றே

துளங்குகின்ற பனித்துளி பாராய்! அதுவானேன் யான்!'

இப்பாடல் கேட்டு அருகிலிருந்த ஒரு பாங்கி பெருமூச்சு விட்டு அதற்கு எதிர் பாடல் பாடினாள்.

'துளங்குகின்ற பனித்துளியே!’

உளந் துவளல் வேண்டா

இளந்தளிரின் முழு அழகும் வெளிப்படுமந் நன்னா

ளளவும் அதுகடந்தும் உன்றன் வளங் குலவும் இனிதே!”

இச்சமயம் திருமனைக்குரிய துறவி மறுதிசையிலிருந்து அறைக்குள் நுழைந்தார். 'அம்மையீர், நீங்கள் இந்த அளவு மனைப்புறத்துக்கு வந்து தங்குவது சரியல்ல. பலகணிக்கு அருகாமையில் வந்துநிற்க இந்த நாளும் ஏற்றதன்று. அருகிலுள்ள துறவியிடம் வெப்புவலியைக் குணப்படுத்திக் கொள்ளும்படி கெஞ்சி இளவரசன் இங்கே வந்திருப்பதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன். அவர் மிகவும் எளிய தோற்றத்துடன் உருமாறி வந்திருப்பதனால்தான் நான் அவரை அறியாமல் போய் விட்டேன். அவர் இவ்வளவு அருகாமையில் வந்திருந்தும் அவரைச் சென்று காணமுடியாமல் போய்விட்டது' என்றார்.

துறவுநங்கை இதுகேட்டுத் திடுக்கிட்டாள். 'அந்தோ! என்ன அறியாத்தனம்! அவர் இவ்வழியாகச் சென்றிருந்தால் நம்மைப் பார்த்திருக்கக்கூட இயலுமே.!' என்று கூறித் திரையை அவசர அவசரமாக மூடினாள். துறவி மேலும் தொடர்ந்தார். 'கெஞ்சி இளவரசரைப் பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைக்காண இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது பற்றி நான் மிகவும் மகிழ்கிறேன். அவர் அவ்வளவு பேரழகுவாய்ந்தவர் என்று கேள்வி. உலகவாழ்வின் பற்றுவிட்டுத் துறவுவாழ்க்கை மேற்கொண்டுள்ள என் போன்ற வயதுசென்ற துறவிகள்கூட அவ்வழகைப் பார்த்தபின் அதன்முன் உலகின் பழிபாவங் களையும் துயரங்களையும் ஒருசிறிது மறந்துவிட வழி ஏற்படும். இவ்வளவு அழகுக்கு உறைவிடமான இந்த உலகில் இன்னும்