உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(229

நாள்வரை விரும்பி வேண்டிக்கொண்டுள்ள புதுவாழ்வை அடையும் வகையில் எனக்குத் தடையாய் இருக்குமோ என்றுகூட அஞ்சுகிறேன்' என்று அவள் கூறியனுப்பினாள்.

துறவு நங்கையின் படுக்கையறை அருகிலேயே இருந்தது. இடை யேயுள்ள திரையும் மெல்லியது. ஆகவே சோனகனிடம் துறவுநங்கை செய்திகூறியனுப்பிய சமயம் அவன் அவ்வப்போது அவளது தளர்ந்த, ஆர்வக்குரலைக் கேட்க முடிந்தது. சோனகன் இப்பால் வந்த பின்னும் அவள் யாரிடமோ பேசினாள். ‘எவ்வளவு தயவு அவருக்கு! எவ்வளவு கனிவுடன் விசாரிக்கிறார். நம் குழந்தை இதை அறிந்து நயமுடன் நன்றி தெரிவிக்கும் வயது அடையவில்லையே என்றுதான் வருந்துகிறேன்!' என்றாள் அவள். இது கேட்ட கெஞ்சி சோனகனிடமே பேசினான். 'இது தயவு பற்றிய செய்தியே யல்ல. இவ்வளவு ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் இந்தக் காரியத்தில் நான் உறுதியாயிருப் பதிலிருந்தே காணலாம், மிக ஆழ்ந்த உணர்ச்சி என்னை இதில் தூண்டுகிறது என்பதை! இந்தக் குழந்தையைக் கண்டதுமுதல் அதன் மீது விசித்திரமான ஏதோ ஒருபாசம் என்னை ஆட்கொண்டிருக்கிறது - அது இந்தப் பிறப்புக்குமட்டும் உரிய பாசமாய் இருக்கமுடியாது. உண்மையில் நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் கருதலாம், அச்சிறுமியின் குரலைக் கேட்க வேண்டுமென்று எனக்கு இப்போது ஆவலாய் இருக்கிறது.நான் போகுமுன் அவளைச் சிறிது வரவழைப்பீர்களா?' என்று கேட்டான்.

சோனகன் மெல்ல மறுமொழி பகர்ந்தாள். ‘பாவம், சிறுபிள்ளை! இதற்குள் தூங்கிப் போய்விட்டது.தன்னைச் சூழ்ந்த இன்னல்களைக்கூட அது அறியவில்லை. என்றாள். ஆனால் அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, பெண்டிரறையில் ஒரு மெல்லடி ஓடிச் செல்வது கேட்டது. திடுமென ஒரு புதுக்குரலும் கேட்டது. 'பாட்டி, பாட்டி! மலைப் பக்கத்தில் நம்மைக் காண வந்தாரே, இளவரசர் கெஞ்சி. அவர் இப்போது உங்களைப் பார்ப்பதற்கென்று வந்திருக்கிறாராம். அவரை ஏன் வரவழைத் துப்பேசக்கூடாது, பாட்டி!' என்று அக்குழந்தை பேசிற்று. 'உசு, சும்மா இரு, குழந்தை!' என்று பணிப் பெண்கள் வாயமர்த்த முயன்றனர். கெஞ்சி கேட்க அதுபேசி மதிப்புக் குலைக்கிறதே