உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

83

அத்தனையும் இந்த முகத்தின் முன் தானே பாழாய்ப்போயிற்று. அவர் அத்தனையும் பலி கொடுத்தார். இதன் மாய அழகுக் கவர்ச்சிக்காக! நாடு நகைக்க, மக்கள் விழிக்க, என்னை மன்னர் அரண்மனையில் வைத்துக் காக்கிறார்.நான்கு ஆண்டுகளாக என் செருக்கை அவரிடம் காட்டி வருகிறேன். அவர் அனலில் மெழுகாய்த் துடிக்கிறார். ஆனால் இம்முகத்துக்கு அவர் அஞ்சிக் கிடக்கிறார். ஆ, என் மகள் லைலா, அதோ வருகிறாள். அவள் இளமை முகம் உலகைப் படுத்தாத பாடு, தாயான என் முகம் படுத்துகிறது! சரி, முகம் ஆட்சி செலுத்தட்டும்! லைலா!

லைலா: அம்மா.

(லைலா வருகிறாள்.)

நூர்: கண்மணி, இப்படி என் அருகில் உட்கார். (கட்டியணைத்துக் கொள்கிறாள்) உன் முகம் ஏன் விளறிப் போயிருக்கிறது?

லைலா: இந்தக் கேள்வியைக் கேட்பது என் அம்மாதானா? அம்மா தானா கேட்க வேண்டும்?

நூர் : டட், டட்! இதுமாதிரி பேசாதே. உனக்குத் தெரியாதா என் நிலைமை? நான் என்ன செய்ய முடியும்?

லைலா: நீ என்ன செய்யமுடியுமா? கணவனிறந்த பின், அவன் உயிரைக் கருக்கிய கயவனை நாடி ஆக்ராவுக்கு வரமுடியும்! உன் நிலைமையில் வேறு எந்தப் பெண்ணாவது இருந்தால், நாக்கைப் பிடுங்கிக் கொண்டிருப்பாள்; நஞ்சைத் தின்றிருப்பாள்; கணவனைக் கொன்று விட்டானே பாதகன் என்று பழிதூற்றிப் புயலெழுப்பியிருப்பாள்.

நூர்: தாயிடமா இப்படிப் பேசுகிறாய், லைலா?

லைலா: தாயானதால்தான் இந்த அளவுக்குப் பேசுகிறேன். இல்லையென்றால் கண்ணில் விழித்துக் கூட இருக்க மாட்டேன். இப்போது கூட உன் கடமையை நினைவுபடுத்த எச்சரிக்கை தரத்தான் வந்தேன். நீயாக இங்கே வந்து மாட்டிக் கொண்டாய். போகட்டும். இங்கேயே இருந்தால் நம்மைப் பற்றி யார்தான் என்ன சொல்ல மாட்டார்கள்? வேண்டாம், நாம் வங்கம் சென்றுவிடுவோம்.