உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 23

82

ஜெஹாங்: அப்படியானால் அவன் குற்றம் இன்னும்

பெரிது!

மகபத்: ஆம். ஆனால் பேரரசர் அக்பர் காலத்தில் இதே குற்றத்திற்குத் தங்கள் மீது கருணை காட்டப் பட்டதை நினைவு கூருங்கள் அரசே. அதன் பயனாகத் தான் தாங்கள் இந்தத் தவிசின் மீது வீற்றிருக்கிறீர்கள்.

மகபத்!

ஜெஹாங்: (சீற்றத்துடன், நிலத்தில் காலை அறைந்து)

மகபத்: அரசே, மகபத் சண்டையிடத் தெரிந்தவன் மட்டுமே. அரசவையில் பேசத்தக்க நாநய வல்லுநன் அல்லன். இளவரசர் மாட்டுக் கருணை காட்டும்படி மீண்டும் கோருகிறேன். பிறர் தூண்டுதலால்தான் அவர் குற்றம் செய்ய நேர்ந்தது. அவர் உயர் பண்பாளர் என்பதை எண்ணக் கோருகிறேன்.

ஜெஹாங்: உயர் பண்பா? என்ன பண்பை நீர் கண்டீர்?

மகபத்: தம் உயிர் காக்க, அவர் பிறரைக் காட்டிக் கொடுக்க இணங்கவில்லை, அரசே! அவர் கோழையல்ல.

ஜெஹாங்: ஆனால் பேரரசைச் சரிவினின்றும் காக்கச் சதிகாரர்களின் பெயர்ப்பட்டியல் தேவை.

மகபத்: அவர் துரோகம் இல்லாமலே நான் அதைக் கண்டு பிடிக்கிறேன். அவரை மன்னியுங்கள்.

ஜெஹாங்: சரி, அவன் சிறையிலிருக்கட்டும். பின்னால் கவனிப்போம்.

காட்சி 11

(ஆக்ரா அரண்மனை, மேஹர் கண்ணாடி முன்

நின்றுகொண்டு தனக்குத் தானே பேசுகிறாள்.)

நூர்: ஆ, இந்த ஒரு முகம் உலகை என்ன பாடுபடுத்துகிறது! இதை நாடித்தானே என் கணவர் உயிருடனிருக்கும்போது என் அடிமையாயிருந்தார். அதற்காகத் தானே உயிரையும் விட்டார். சிங்க ஏற்றைப் பழித்த மாவீரர் அவர். அன்னையினும் தயவுடையவர். குழந்தை போன்ற தூய உள்ளம் படைத்தவர்.