உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

81

ஆயஷ்: மன்னர்மன்ன! இவன் தங்கள் புதல்வன்; சிறு பிள்ளை, இம்முதற்குற்றத்திற்கு மன்னிப்பருளும்படி வேண்டுகிறேன். குறைந்த அளவு தண்டனையாவது அளிக்கக் கோருகிறேன்.

ஜஹாங்: பேரரசின் நடுநிலை நீதியிலிருந்து அதற்காக நான் பிறழ முடியாது. வேண்டுமானால் அவன் மனதைக் கலைத்த சதிகாரர் யாரென அவன் கூறட்டும், அவனை மன்னித்து விடுகிறேன்!

குஸ்ரூ: தன் பிள்ளையை மன்னிக்க, மற்றவர்களைத் தண்டிப்பது தான் பேரரசின் நடுநிலை நீதியோ? என் உயிருக்காக என்னால் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்.

ஜஹாங்:

ங்: ஆகா, அப்படியே! ஏவலர்களே, இதோ இவனை விலங்கிட்டு உட்கார முடியாமல் சிறையில் நாள் முழுதும் நிறுத்திவைத்து அடித்து நொறுக்குங்கள். சாகும்வரை தண்டனை அடையட்டும்!

து

(ஏவலர் முன்வருகின்றனர்.)

மகபத்கான்: (முன்வந்து) அரசே, ஒரு வேண்டுகோள். ஏவலர்களே, சிறிது பொறுமை காட்டுங்கள். (பேரரசை நோக்கி) நான் என்றும் தங்கள் ஆணைக்கிடையே குறுக்கிட்டதில்லை. எனக்கென்று எந்த மனுவும் கோரியதில்லை. இன்று ஒரு மனுக் கோருகிறேன்.

ஜெஹாங்: கேள், மகபத்! யாருக்கும் ஜெஹாங்கீர் நீதி மறுத்ததில்லை. அதுவும், மகபத்கானுக்குக் கட்டாயம் மறுக்கப் போவதில்லை.

மகபத்: நன்றி, மகிழ்ச்சி. குற்றஞ்சாட்டப் பட்டவர் ளவரசர். எனவே இளவரசருக்குரிய தண்டனையையே அவருக்குத் தரக் கோருகிறேன்.

ஜஹாங்:ஆளைக்கண்டு நீதிசெலுத்துபவன்ஜெஹாங்கீரல்ல. மகபத்: ஆளைக்கண்டு நீதிசெலுத்தக் கோரவில்லை, அரசே! பதவிகண்டு நீதிசெலுத்த வேண்டுகிறேன். குஸ்ரூ நாளை பேரரசராகக் கூடியவர்.