உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 23

விருப்பத்தை அடக்குவது தான் மனிதத் தன்மை- சிறப்பாக ஆண்கள் அதை அடக்கியாள வேண்டும்.

ஜெஹாங்: மேஹரைச் சந்திக்க அவள் விருப்பம் அறிய வேண்டுமானால், அவளை வங்கம் அனுப்பவும் அவள் விருப்பம் தெரியவேண்டாமா?

ரேவா: அவள் விருப்பம் எனக்குத் தெரியும், அரசே!

ஜெஹாங்: அந்தோ, நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரியுமானால்...

ரேவா : நன்றாகத் தெரியும், அரசே, ஆயினும் நான் உயிருடனிருக்கும் வரை ஒரு குடும்பப் பெண்ணுக்கு என் அரண்மனையில் அவமதிப்போ, அவதூறோ ஏற்பட நான்

உடந்தையாயிருக்கமாட்டேன்.

ஜஹாங்:

ரேவா,

உன்னைத்

தெய்வமாகப்

போற்றுகிறேன். ஆயினும், ஆயினும்...

(லைலா வருகிறாள்.)

லைலா: ஆயினும் என்ன பேரரசே!

(ஜெஹாங்கீர் மலைப்படைந்து விழிக்கிறான்.)

அரசே, நான் ஷேர்கானின் மகள், என் தாயைத் தாங்கள் என்ன குற்றத்திற்காக வாழ்நாள் முழுதும் கைதியாக்கி வைக்க எண்ணியிருக் கிறீர்கள் என்று தெரியவில்லை. ஷேர்கானின் குடியின்மீது இவ்வளவு அடக்கு முறை, அட்டூழியம் செய்ய உமக்கு என்ன துணிவு? உலகத்தில் நீதிச்சக்கரம் சுழலாது நின்றுவிட்டது என்ற எண்ணமா?

ரேவா: உங்கள் நன்மைக்காகத்தான் மன்றாடுகிறேன், அரசே. மேஹருன்னிசாவுக்காக அல்ல.

ஜெஹாங்: (பெருமூச்சுடன்) சரி, அப்படியே ஆகட்டும். லைலா: பேரரசர் வாழ்க. வெல்க நீதி.

ரேவா: ஆடவர்க்கேற்ற செயல் செய்தீர்கள், அன்பரே. பேரரசைக் காத்தீர்; இனியேனும் கடமைவழி கடைப்பிடித்து, இவ்வீணான காதல் தீயை ஆண்மை நீரால் அவித்துவிடும்.