உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60

❖ மறைமலையம் - 3 ❖

போனதை நினையாமலும் நிலவுலகத்தில் இருந்துகொண்டே தாம் கனவு காண்பதாக எண்ணி எண்ணி மயக்கமுற்றுக் கிடந்தார். இப் பண்டிதர் உயிரோடு இருந்த நாட்களில் இவருக்கு நெருங்கின நண்பரான யோகி ஒருவர் இருந்தார். இந்த யோகியாரும் இவருடைய மகனார் ஒருவரும் யோகாப்பியாச முதிர்ச்சியினாலே இத் தூல சரீரத்தில் இருந்துகொண்டே சூக்குமசரீரத்திற் பிரவேசித்து மேல் உலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்துவருவதும், அவ்வுலகங்களில் உள்ளார்க்குத் தம்மால் ஏதும் உதவி செய்யக் கூடுமானால் அதனைச் செய்வதும் உண்டு. ஒருநாள் இந்த யோகியார் இறந்து போன தம் நண்பரான பௌதிக சாத்திர பண்டிதர் இப்போது நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டித் தம் மகனாரை அழைத்து “நீ சூக்குமசரீரத்திற்போய் அவர் நிலைமையை அறிந்துவா” என்று வினார். அவர் அப்படியே மேலுலகத்திற் சென்று மிகவும் பிராயாசையோடு அப்பண்டிதரைக் கண்டு அழைத்து வினவியபோது பண்டிதர் பின்வருமாறு சொல்லப் புகுந்தார்: “இப்போது யான் இருக்கும் நிலைமையானது வசதியின்றி மிகவும் மயக்கமுள்ளதாயிருக்கின்றது. ஆயினும், யான் காணும் இப் புதுக் காட்சியானது கனவேயாமென்றும், என்னெதிரிற் றோன்றும் உமது வடிவமானது கனாவடிவே யாமென்றும் சொல்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகின்றது,” என்று மிக்க அவநம்பிக்கையோடு பேசினார். பிறகு கடைசியாக அவர் அவ்விளைஞரைப் பார்த்து “நீர் சொல்லுகிறபடியே நீர் உண்மையான ஆளாகவும், என் பழைய நண்பருடைய மகனாராகவும் இருந்தால் உமது உண்மையை மெய்ப்படுத்தும் பொருட்டு உம்முடைய தந்தையிடம் இருந்து ஏதாவது ஒரு செய்தி கொண்டு வாரும்.” என்றார். இந் நிலவரையினுள்ளிருக்குங்காறும் யோகிகளின் சீடர்கள் இத்தகைய செய்தி கொண்டுவந்து மேல் உலகங்களில் உள்ளார்க்கு மெய்ப்படுத்திக் காட்டுதல் கூடாது என்று கண்டிப்பான விலக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தப் பண்டிதரின் அதிர்ஷ்டவசத்தால் இவர்க்கு மாத்திரம் அப்படிச் செய்து காட்டலாம் என்று மேல் உலக அத்தெய்வத்தினிடமிருந்து அனுமதி தரப்பட்டது. அதன்மேல் அவ்விளைஞர் நிலவுலகத்தில் தம் தந்தையிடம் திரும்பி வந்து நடந்ததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/93&oldid=1628615" இலிருந்து மீள்விக்கப்பட்டது