உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184

❖ மறைமலையம் - 3 ❖


‘மருள்’ என்பது அறியாமையைச் அறிவில்லாப்பொருள்; செய்யும் ஓர் இதனை ஆணவமலம் என்றுஞ் சொல்லுவர். ‘அருள்’ என்பது எல்லாம் வல்ல ஆண்டவனது ஓர் அருமைக்குணம்; இது தூய அறிவுமயமாய் விளங்குவது.

எந்நேரமும் மருள் வசப்பட்டு நிற்கும் உயிர் இந்தப் பருவுடம்பைவிட்டு நுண்ணுடம்புகளிற் செல்லுமாயின், அவ்விடங்களில் நிறைந்த முழு இருளில் அழுந்தி அறிவின்றிக் கிடக்கும். அங்ஙனம் மருள் வசப்பட்டு நில்லாமல், அருள் வசப்பட்டு நிற்குமாயின் அவ்வுயிர் நுண்ணுடம்புகளிற் சொல்லுதற்கரிய அறிவொளி சென்றமாத்திரையானே விரியப்பெற்று இன்ப வுருவாய் விளங்கும்.

ஆனால், மக்களிற் பெரும்பாலார் இப்பருவுடம்பில் நின்று தமதறிவை நடைபெறச் செய்யும் போது, அவ்வறிவை அருள் வசத்திலே நிற்க விடாமல் அதனை இடைவிடாது மருளிலே அழுந்தும்படி செய்தலால், அவர்களுக்கு அருள் நாட்டமே இல்லாமற் போய்விடுகின்றது. பாருங்கள்! தூங்கி விழித்த காலந்தொட்டுத் திரும்பவுந் தூக்கத்திற் செல்லும்வரையில் மக்களுடைய நினைவுகளுஞ் செய்கைகளும் எவ்வகைப்பட்டு நிகழ்கின்றன என்பதைச் சிறிது ஆழ்ந்து சிந்தியுங்கள். எல்லாம் வல்ல இறைவனது அருள் ஒளியை நாடுகின்றார்களா? இல்லை, இல்லை. தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே எவ்வுயிரைக் கொன்று தின்னலாம்? எவனை மோசஞ்செய்து பொருள் தொகுக்கலாம்? இவற்றிற்குத் தடை செய்வாரை எவ்வாறு தொலைக்கலாம்? என்னும் கருத்தோடு எழுந்து, நாள் முழுதும் தாம் கொண்ட எண்ணப்படியே முயன்று, மறுபடியும் தூங்கப் போகுங்கால் அந்நினைவுகளோடு தாமே ஆணவமலத்திற் போய் அழுந்தி, மறுநாட்காலையிலும் இங்ஙனமே எழுந்து இம்முறையே தமது வாழ்நாளைக் கழித்துக் காலனுக்கு இரையாய் ஒழிகின்றார்கள். இவ்வாறு இப்பிறப்பில் முழுவதும் தமது அறிவை மருளிலே அழுத்திவைத்துத் தொலைத்தமையாலே, திரும்பவும் பிறவிக்கு வருங்கால் அவ்வறியாமையோடுதானே பிறந்து துன்புறுவார்கள். இவ்வறியாமை தொலையும் வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/217&oldid=1628251" இலிருந்து மீள்விக்கப்பட்டது