உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
338

❖ மறைமலையம் - 3 ❖

கல்வியறிவில்லாதவன், உண்மையில் ஒன்றுமேயறியாத ஓர் ஆள். அந்த ஜேம்ஸ் என்பவன் இயற்கையாகவே தெளிவுக்காட்சி வாய்ந்த ஓர் உண்மையான கருவியென்றும், அவன் நடைத் துயிலின்கட்செலுத்தப்பட்டபோது அந்நகரத்திற்கு அண்டையிற் கீழே குறிப்பான ஒரு நிலப்பாங்கில் ஏராளமான தண்ணீரும் மண்ணெண்ணெயும் இருக்கின்றனவாக அறிவித்தனனென்றும் காரொலின் ஜார்டன் என்னும் மாதர் ஒருவர் வெளியறிவித்தனர். நீண்டகாலம் வரையில் அவன் கூறியதை எவருமே உன்னித்துப் பார்க்கவில்லை. கடைசியாகச் சிக்காகோ நகரத்திற்கு மெயின் என்னும் ஊரிலிருந்து அலுவல்மேல்வந்த உவைட்ஹெட், ஸ்காட் என்னும் இருவர், ஆபிரகாம் ஜேம்ஸ் என்பவன் கூறிய செய்தியைக் கேட்டுத் தோண்டினால் ஏராளமான தண்ணீர் கிடைக்கும் இடமாக அவனாற் சொல்லப்பட்ட நிலத்தண்டை அவனை அழைத்துக் கொண்டு சென்றார்கள். நடைத்துயிலிற் சென்றதும், ஜேம்ஸ் அவ்விடத்தை உடனே சுட்டிக்காட்டினான். தான் அத்தண்ணீரைப் பார்ப்பதோடு, அஃது, அவர்கள் அப்போது நிற்கும் இடத்திற்கு இரண்டாயிரம் மைல்தொலைவில் உள்ள மலைப்பாறைகளிலிருந்து தோன்றிப் பல நில அடுக்குகளினூடும் நிலவறைகளினூடும் ஓடிவருவதையுந் தான் ஒருபடத்திலெழுதிக் காட்டக்கூடுமென்றும் அவர்கட்குச் சொன்னான். உடனே அந்நிலத்தை விலைகொடுத்து வாங்கும் ஏற்பாடுகள் செய்து, அதனைத் தோண்டுதற்குத் துவங்கினர். இங்ஙனந் துவங்கியது கி.பி 1864ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களிலேயாகும்; நவம்பர்த் திங்கள் வரையில் நாடோறும் நிலத்தைத் தோண்டிக்கொண்டே போக, எழுநூற்றுப் பதினோரடி ஆழத்திற் சென்றதுந் தண்ணீர் வந்து தட்டியது; உடனே இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முந்நூறாயிரம் மரக்கால் தண்ணீர் வெளிக்கிளம்பி ஓடலாயிற்று.

“தமரூசி துளைத்துச் சென்ற பொத்தலானது கீழுள்ள நிலப்படைகளின் வகைகளைக் காட்டியது; இப்படைகள் அத்தனையும் முன்னமே தெளிவுக்காட்சியுடைய அவன் கண்டு சொன்னமையால், நேரே காணும் மற்றவர் கண்களுக்கு அவை அதன் உண்மையை மெய்பெறக் காட்டின முதல் நூறு அடிவரையில் தமரூசி துளைத்துச் சென்றது அடைமண் படையாயிருந்தது; அதற்குக் கீழே முப்பத்தைந்து அடிவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/371&oldid=1626594" இலிருந்து மீள்விக்கப்பட்டது