உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

95

ஸெண்ட் பீட்டர்ஸ் நோக்கி விரைந்து கொண்டிருந்தது ஒரு கப்பல். தான் அஞ்சி ஒதுங்கும் இடத்தில், ஒரு சிறு பாய்க்கப்பல் துணிந்து முன்னேறுவது கண்டு கப்பலோட்டிகள் துணுக்குற்றனர்.

பாறைகளின் பின் ஒரு பாய்க்கப்பல் செல்வது கண்ட பல ஊர்ப்புற மக்கள் அது பாய் என்று உணரமாட்டாமல் கடலகத்தில் ஒரு கரும் பூதம் உலவுகிறது என்ற புரளியைக் கிளப்பினர்.

ஒரு காதலன் மன உறுதி கெர்ஸ்னி மக்கள் எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி எண்ணிக் கற்பனை செய்யும்படி தூண்டிற்று. ஆனால் உண்மைச் சய்தி அவர்கள் கற்பனைகளையெல்லாம் கடந்த ஒரு புதிர். தன்னந் தனியாக யார் உதவியுமின்றி, எவரும் தன் புகழில், வெற்றியில் பங்கு கொள்ள விடாமல், எவரும் தனக்கு முன் சென்றுவிடக் கூடாதே என்ற அவசரத்துடன் கல்லியட்டூவ்ரேயை நோக்கி, பாறைகளிடையே காலகாலன் என்று கருதப்படும் டூவ்ரேயை நோக்கி, விரைந்து சென்றான்.

அவன் உணவு கொள்ளவில்லை, நன்கு உடுத்தவில்லை. அவ்வளவு படபடப்புடன் விரைந்துசென்றான், டெரூசெட்டைப் பெறுவதற்கான வீரச்செயல் செய்ய, தனி ஒருவனாய் டியூரான்ட் கப்பலின் இயந்திரத்தைத் தூக்கிக் கொண்டுவர!

வேலையின் கடுமை அவன் அறியாததல்ல. பல மனிதர், பல கருவிகள், சாதனங்களுடன் செய்வதற்குக்கூட அரிய செயல் அது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அச்செயலுக்கான பரிசு டெரூசெட் என்ற எண்ணம் அவன் துணிச்சலுக்கு இறக்கை தந்தது. அவன் அப்பரிசு பெற, கடலைப் பாயாகச் சுருட்டத் தயார்! வானத்தை வில்லாக வளைக்கத் தயார்!

கடலும் அலையும் அவன் கடந்து சென்றான். பாறையும் டூவ்ரேயின்

புயலும் அவனை அச்சுறுத்தவில்லை.

பாழ்ந்தடத்தைக் காணும்வரை அவன் ஓயவில்லை. அச்சுறுத்தும் அப்பாறையில் சென்றுதான் அவன் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.