பிறமொழி இலக்கிய விருந்து -2
135
ஒழுக்கை மிகுதியாக்கிற்று. இதனால் பாறையின் அநீதி தலைமாறிவிட்டது. வடபுறம் மீன் மிகுதி அகப்பட்டது. தென்புறத்தார் நிலையில் ஏமாற்றம் உண்டாயிற்று.
போட்டி பொச்சாப்பு ஆகியவற்றுக்கிடையே வெற்றி தோல்விகள் எப்போதும் நிலையாயிருக்க முடியாது. கெர்ஸ்டாப்பின் வெற்றி அவன் உயிருக்கே உலைவைத்தது. ஜக்ரிஸ் ஆள்வைத்துத் தன் முழு வைரத்தையும் அவன் மீது தீர்த்துக்கொண்டான்.அடிகள் உயிர்நிலையைத் தாக்கின. அவன் விரைவில் பாயும் படுக்கையுமாகி, சில நாட்களில் உயிர் நீத்தான்.
ஜக்ரிஸின் வெற்றி கிட்டத்தட்ட நிலையான வெற்றியாகவே
தோன்றிற்று. ஏனெனில் கெர்ஸ்டாப்பின் ஊரார் அவன் முடிவுகண்டு அஞ்சி அடங்கி நின்றனர். உள்ளூரப் பகைமை நிலவிற்று.ஆனால் அது செயலாக மாறவில்லை. கெர்ஸ்டாப்பின் ஒரே மகன் ஓலா இதில் ஈடுபடவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. அவன் உள்ளத்தை அவன் உறவினரின் அடங்கிய பகைமை சென்று எட்டவும் இல்லை.
ஆனால் உள்ளூர இதயத்தின் ஆழத்தில் கெர்ஸ்டாப்பின் ஆட்களுக்கு இருந்த நம்பிக்கையைவிட, ஜக்ரிஸின் ஆட்களுக்கு இருந்த நம்பிக்கை வரவரக் குறையத் தொடங்கிற்று. ஏனெனில், கெர்ஸ்டாப்பின் குடி மதிப்பைக் காக்க ஒரு புதல்வன் இருந்ததுபோல், ஜக்ரிஸுக்குப் புதல்வன் இல்லை. அழகில் சிறந்த இம்பார் என்ற புதல்விமட்டுமே இருந்தாள். அவள் குடும்பத்தின் செல்வ உரிமை காக்க முடியும். ஆனால் மலைநாட்டு வீரப் போராட்டங்களிடையே, குடிமதிப்பை ஒரு வீரப் புதல்வன் காப்பதுபோல, மகளோ மருமகனோ காக்க முடியாது.
ஓலாவிடம் மலைநாட்டு வீரனுக்குரிய எல்லாப் பண்புகளும் நிரம்பி இருந்தன. அவனிடம் அந்தசந்தமான உடல்வனப்பும், உறுதி வாய்ந்த உடல் வலுவும் வீரமும் ஒருங்கே பொருந்தியிருந்தன. பதினாறு வயது இளைஞனாயிருக்கும் போதே மலைவாணரும் வியக்கும்படி அவன் ஒரு கரடியைக் கழிகொண்டு தாக்கித் துரத்தியிருந்தான். இவ்வீரத்தின் புகழை அவன் பகைமையற்ற உள்ளமும் களங்கமில்லா நடத்தையும் பெருக்கின. அதன்முன் பகைவர்கள் கூட அவனிடம் தம் உள்ளப்