உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(136

//---

அப்பாத்துரையம் - 24

பகைமையைக் காட்ட வெட்க மடைந்தனர். அவன் ஆற்றின் இருபுறமும் இரண்டு மலைகளிலும் தங்கு தடையின்றித் திரிந்து வந்தான்.

போர் வெறியும் பகைமைப் பூசலும் மலைநாட்டு மக்களுக்கு உடன்பிறந்த குணங்கள். ஆனால் அவர்களுக் கிடையில் இருந்த சில பழக்க வழக்கங்கள் இவற்றைக்கூட அவ்வப்போது மட்டுப்படுத்த உதவின. ஞாயிற்றுக் கிழமைதோறும் கிருஸ்தவ உலகில் வழிபாட்டு உரிமை நாளாகக் கொள்ளப்படுவதுபோல, இம்மலை நாட்டில் சனிக்கிழமை தோறும் காதலர் உரிமை நாளாகக் கொள்ளப்பட்டு வந்தது. சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலைவரை எந்த இளைஞனும் குடும்ப மதிப்பெல்லை, ஊரெல்லை, தாண்டி, எந்தப் பெண்ணையும் எவர் தடையுமின்றிக் காதலிக்கலாம். பெண்களுக்கும் இதனால் கெட்ட பெயர் வருவதில்லை. தாய் தந்தையர், உறவினர் ஆகிய எவரும் அதைத் தடுக்க முனைவதும் இல்லை. ஆயினும் இந்த இயற்கைப் பழக்கத்திற்குக்கூட கெர்ஸ்டாப்- ஜக்ரிஸ் குடிகளின் பகைமை பல தலைமுறைகளாகத் தடை விதித்திருந்தது. எல்லாக் கிழமைகளையும் போல, சனிக்கிழமையிலும் எவரும் ஆற்றைக் கடந்து செல்வதில்லை.

ஓலா ஊரெல்லையை மதியாததுபோலவே, இந்தப் பகைமையின் எல்லைக் கோட்டையும் மதிக்கவில்லை. அவன் உள்ளத்தில் இம்பாரின் அழகும் அமைதியும் எப்படியோ காதல்லைகளை எழுப்பியிருந்தன. தன் தந்தையின் பகைவன் மகள் என்றுகூடப் பாராமல், அவன் அவளைக் காணவும், கண்டு பேசவும் துணிந்தான். ஆனால் புறப்பகைமை இல்லாத இடத்திலும், அகப்பகைமை இக்காதலுக்குத் தடையாகவே இருந்தது. இம்பார் அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் நாட்டத்தைக் கவனித்த ஜக்ரிஸ் குடியினரும் அவனை முறைத்துப் பார்க்கத் தொடங்கினர். எனினும் ஓலா இவற்றைச்

சட்டைபண்ணவில்லை.

ஆற்றின் இக்கரையிலுள்ள தனி மாளிகையிலிருந்த அவன் கூரிய கண் பார்வை ஆற்றைக் கடந்து இம்பாரின் இல்லத்தையும் அதில் அவள் அறையின் பலகணியையும் துருவித் துருவி நோக்கும். அவள் போக்கும் வரவும் அவன் ஓயாக்