148
அப்பாத்துரையம் - 24
அவன் குரலில் கண்டிப்பும் வீறும் இருந்தன. ஆயினும் அவன் நாத் தழுதழுத்தது என்பதை ஓலா கவனிக்காமலில்லை. அவன் குரலில் அடங்கிய உள்ளுணர்ச்சியின் கனிவும் ஈரமும் தோய்ந்திருந்தன.
அவன் இப்போது அவர் பேச்சுக்குக் காத்திருக்கவில்லை. இதோ' என்று பாய்ந்தான்.
தன் படகைப் போய்த் தேடக்கூட அவனுக்கு நேரமில்லை. ஆற்றைக் கடக்கும் படகு ஒன்று அருகே இருந்தது. படகோட்டியும் அதைக் காத்துக்கொண்டு இருந்தான். ஓலா எதுவும் பேசாமல் அவனைப் படகிலிருந்து பிடித்துத் தள்ளிவிட்டு, அவன் திரும்பிப் பார்க்குமுன் படகை ஆற்றினுள் செலுத்தினான்.
அன்று ஆற்றில் செல்லுவதற்குப் படகுகளே உதவ முடியாது. ஏனென்றால் ஆற்றின் பரப்பில் ஒரு பகுதி பனிக்கட்டியால் உறைந்திருந்தது. அதே சமயம் அதில் நடக்கவும் முடியாது. ஏனென்றால் பனிப் பாளங்கள் முறிந்து தகர்ந்தும் கவிழ்ந்து உருண்டும் சில இடங்களில் இடையே ஆற்றொழுக்குக்கு இடம் விட்டு விலகியும் தாறுமாறாக மிதந்து சுழன்றன. ஓலா கரையோரத்தில் பனிக்கட்டிகளின்மீது படாமல் படகைச் சுற்றிச் சுற்றி வளைத்து உதைத்தான். சில சமயம் பெரிய பனிக்கட்டிகளிலிருந்து விலக ஆற்றின் போக்கிலும் அதை எதிர்த்தும் சுற்றியும் செல்லவேண்டியிருந்தது. இந்நிலையில் அவன் ஆற்றின் பரப்பில் ஒரு பகுதி கடக்குமுன்பே பனிமூடிய ஆற்றுச்சுழிப்புக்கு இரையாகிவிடக்கூடும் என்றே எவரும் நி னைத்தனர். ஆனால் அவன்மட்டும் உள்ளங்கலங்காமல், ஒருமுகப்பட்ட கருத்துடன் ஆற்றுடனும் பனிப் பாறையுடனும் போராடினான்.
சில சமயம் அவன் படகைத் தண்டோச்சி இயக்குவான். பனிப் பாறைகள் வந்தவுடன் அதன்மீது இறங்கிப் படகை இழுத்துச் செல்லுவான். மீண்டும் பாறை உடைந்த இடத்தில் படகிலிருந்து ஓட்டுவான். சில இடங்களில் இரண்டு முறையும் பயன்படாமல் போயின. ஆற்றைக் கடக்க முடியாமல், சுழல்களையும் வேக நீரோட்டங்களையும் விலக்கி ஆற்றில்