துர்கெனிவ்
1. கைக்கடிகாரம்
என் வாழ்க்கையின் பெரும் பகுதி ஒரு கைக்கடிகாரத்தின் கதையாகவே முடிந்துவிட்டது. என் பிறந்த நாளன்று நாஸ்டஸி யால் அது எனக்களிக்கப்பட்ட து.
நாஸ்டஸி என்றுதான் நாங்கள் அவரை அழைப்பது வழக்கம். எங்கள் வெறுப்பிற்கேற்ப அவர் பெயரும் அனஸ்டாஸி அனஸ்டாஸியேவிச் புச்சாவ் என்று முழங்கிற்று. ஆயினும் என்னைப் பொறுத்தமட்டில் நான் அவரை வெறுக்க முடிந்ததே தவிர, அவரைக் காணாமலும் அணுகாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் என் நற்றந்தை. எனக்கு அலக்ஸி என்ற பெயர் வைத்தவரும் அவர்தான்.
வள்ளியாலானது;
அந்தக் கைக்கடிகாரம் பளபளப்பானது. நாஸ்டஸி அதைக் கையில் வைத்துக்கொண்டு “அலக்ஸி, இதோ பார். உன் நற்றந்தை இதுவரை உனக்குப் பரிசு எதுவும் தரவில்லையல்லவா? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது இதைத் தருகிறேன்" என்றார்.
ய
நான் அவரிடமிருந்து எட்டியே நின்றேன். ஆனால் கைக்கடிகாரம் என் கண்ணைப் பறித்தது. நான் கையேந்தி அதை வாங்கிக் கொண்டேன். அதற்குள் என் அத்தை பெலகேயா பெட்ரோவ்னா குறுக்கிட்டாள். வழக்கம் போல அவருடைய நீளமான பெயரை ஆவலுடன் வாய்நிறைய உச்சரித்துக்கொண்டு அவள், “அனஸ்டாஸி அனஸ்டாஸியேவிச், இந்த நன்றி கெட்ட பயலுக்கு ஏன் இத்தனை விலையுயர்ந்த பரிசு? இதை வைத்துப் பேணக் கூட இவனுக்குத் தெரியாதே! இப்படி யெல்லாம் நீ தூக்கி வைப்பதால்தான் அவன் விரைவில் கெட்டுப்போகிறான்” என்றாள்.