உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

அப்பாத்துரையம் - 24

அவன் பேசினாலும், நடல்யாவின் பெயருக்கு வெல்ச்சானினாவ் மதிப்புக் கொடுக்காதிருக்க முடியவில்லை. ஆகவே அவன் ஒப்புக்கொண்டான்.

மிஹலாவிச்சின் நட்பைக் கூறி அவன் உறவினர் பரிந்துரைமீது பாவ்லோவ்ஸ்கிக்கு உயர்ந்த ஊதியத்தில் ஒரு பதவி கிடைத்தது. அவன் லிஸாவை எப்படியாவது வெல்ச்சானினா வினிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் மணம் செய்ய எண்ணியிருந்தான். வெல்ச்சானினாவ் தன் வழக்கில் சமரசம் செய்வதற்காகத் தேடிய சட்டசபையுறுப்பினர் ஃஜாலிபினை அவன் இதற்காகவே சுற்றிக் கொண்டிருந்தான். அவர் சட்டசபை உறுப்பினராயினும் கடன்காரர். அத்துடன் அவருக்குப் பெண்கள் பலர். அவர்களை எப்படியாவது நல்ல இடத்தில் தள்ளிவிட அவர் ஆவலாயிருந்தார். அவர் ஆறாவது பெண் நாடியா இப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பாவ்லோவ்ஸ்கிகேட்டு அவள் தந்தை இணக்கமும் பெற்றான். மணமகன் சார்பில் பெண்பார்க்கும் துணைவனாகவே அவன் வெல்ச்சானினாவின் துணையைப் பெரிதும் நாடினான்.

வெல்ச்சானினாவ் வேண்டா வெறுப்புடன் சென்றான். நாடியாவுக்கோ, அவள் அக்காள் தங்கையருக்கோ, தோழியருக்கோ பாவ்லோவ் ஸ்கியைச் சிறிதும் பிடிக்கவில்லை என்பதை வெல்ச்சானினாவ் கண்டு கொண்டான். உண்மையில் நாடியா அலெக்ஸண்டர் லோபாவ் என்ற இளைஞனிடமே காதல் கொண்டு அவனுடன் மாறா உறுதியும் பூண்டிருந்தாள். அத்துடன் நாடியாவும் அவள் தோழியரும் மணமகனை விட அவன் தோழனையே பெரிதும் கிளர்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினர்.நாடியா ஒரு தோழியுடன் வந்து வெல்ச்சானினாவ் கவனத்தைத் திருப்பி அவனைத் தனியே கண்டனர். அத்துடன் பாவ்லோவ்ஸ்கிக்குப் பெண்ணின் வெறுப்பைத் தெரிவிக்கும் படியும் அவன் கொடுத்த மணஉறுதிக் காப்பைத் திருப்பிக் கொடுத்து விடும்படியும் வெல்ச்சானினாவை வேண்டினர்.

நாடியாவின் காதலன் செய்தியறிந்து பாவ்லோவ்ஸ்கியை அச்சுறுத்தத் தொடங்கினான். ஆனால் தாய் தந்தையர் பணத்தையும் குடும்ப மதிப்பையும் எண்ணி மண உறுதி செய்ய மனைந்திருந்தனர். வெல்ச் சானினாவ் பாவ்லோவ்ஸ்கியைத்