பிறமொழி இலக்கிய விருந்து -2
தாயகம் வந்துவிட்டாள்
என்றும்
255
அஸோஜிரோவின்
மருந்தினாலும் சாமுரோபியின் பெருந்தன்மையினாலும் அவள் கண் குணமடைந்து விட்டதென்றும் அவளை வந்து மணந்து செல்ல வேண்டு மென்றும் எழுதினார்.
கடிதத்தைக் கொண்டு செல்லும்படி யூமினோசுகே ஸெகிசுகேயை அனுப்பினார். அவனும் புறப்பட்டான். ஆனால் அவன் புறப்படுமுன் மியூகி தன் தாயிடம் கலங்கிய கண்களுடன் வந்து “அம்மா, எனக்கு உங்களையும் அப்பாவையும் விட்டுப்பிரிய மனமில்லையானாலும், என் காதலனிடமிருந்து இன்னும் நான் தொலைவில் இருப்பது சரியன்று, நானும் ஸெகிசுகேயுடன் சென்று அவரை நேரில் காண விரும்புகிறேன்" என்றாள்.
இத்தடவை பெற்றோர் சிறுதடையுஞ் சொல்ல விரும்பவில்லை. “அம்மா, நீ அவரை அடைந்து விரைவில் மணமுடித்துக் கொண்டு வருவாயாக" என்று வாழ்த்தி அனுப்பினர்.
அஸோஜிரோ இப்போது தன் தலைவனின் எதிரிகளான அறத்தாயியின் கும்பல்மீது இறுதி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தான். இவாசிரோ வழக்கப்படி அது வகையில் நாள் கடத்தும்படி தூண்டிவந்தான். ஆயினும் அஸோஜிரோவின் நற்பெயரின் முன்னும், அவன் செல்வாக்கின் முன்னும் இவாசிரோவின் கெடுமுயற்சி பலிக்கவில்லை. படையெடுப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் அஸோஜிரோ தலைநகரின் புறக்கோட்டையில் அமர்ந்திருந்தான்.
ஆனால் இவாசிரோவின் இடையீட்டினும் இனிய, ஆனால் விலக்க முடியாத ஓர் இடையீடு-யூமினோசுகேயின் கடிதம்- இம்முயற்சியிடையே வந்து குறுக்கிட்டது. அஸோஜிரோ கடிதத்தை வாசித்தான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது.
“என் இன்பம் இப்போது எங்கே இருக்கிறது?” என்று அவன் ஸெகிசுகேயைக் கேட்டான். 'இதோ' என்று அவன் பின் நின்று ஒரு குரல் கேட்டது.
அஸோஜிரோ அதுவரை பின்னின்ற உருவத்தைக் கவனிக்கவில்லை குரலைப் பின்பற்றி உருவத்தை நோக்கியவுடன், அதன் முகமூடி கடந்து அவன் உணர்வு
அவனைத்