உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(256

||--

அப்பாத்துரையம் - 24

தட்டியெழுப்பிற்று. அவளும் முகமூடியை விலக்கினாள். முகிலைக் கிழித்துவரும் மின்னொளிபோல அவள் அழகு மீண்டும் புத்துருவில் அவன் பார்வையில் பாய்ந்தது.

அவர்களில் யார் முதலில் தாவி எழுந்தனர் என்று கூறமுடியாது. இருவரும் ஒருவரையொருவர் பற்றி இறுகத் தழுவிக் கொண்டனர். அருகிலிருக்கும் தூதனை இருவரும் மறந்தனர்; மியூகியும் தன் துயரங்களை மறந்தாள். ஸெமிசுகே புன்னகை செய்தான். ஆனால் கண்ணிழந்த பிச்சைக்காரி யார் என்பதுகூட மியூகியின் நினைவிலிருந்து மறைந்தது.

கரைகடந்த வெள்ளமும் அணைகடந்த வெள்ளமும் ஒருங்கு கூடினாற்போல் அவர்கள் காதல் கொந்தளித்தெழுந்து ஒன்றோடொன்று பிணைந்தது. உஜி ஆற்றின் மெல்லிய கலகலப்பும் தென்றலும் மின்மினிக் காட்சிகளும் அவர்களைச் சூழ்ந்து நடனமாடின. காலை அழகுப்பாட்டு அது எய்திநின்ற இன்பக்கணை - ஈருடலையும் ஓருடலாக்கிற்று.

-

அஸோஜிரோ தன் ஏக்கம் மறந்தான். தன் கடமைகளைக் கூட மறந்துவிட்டான். அவன் உள்ளத்தில் காதல் கடமைப் போராட்டம் நீடிக்கவில்லை. தலைவனிடம் சென்று தன் காதலுக்காகப் போராடித் தன் கடமையிலிருந்து சிறிது ஓய்வு பெறவே அவன் துணிந்தான். அஸோஜிரோவின் வாழ்வில் இதுவரை கடமை காதலை வென்றது. இப்போது காதல் கடமையை வென்றுவிட்டது.

தலைவன் தன் காதலியுடன் அரியணையில் வீற்றிருந்தான். அஸோஜிரோவை அவன் எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அவனைக் காண அவன் சிறிதும் தயங்கவில்லை. தலைவனின் காதலியும் புன்முறுவலுடன் “எங்கள் காதல் வாழ்வில்தான் நீர் இதுவரை அரசியல் கடமைகளைப் புகவிட்டீர். இப்போது நீரே அதில் புகுந்துவிட்டீர்” என்றாள்.

இத்தடவை அஸோஜிரோவின் முறையீடு கடமை முறையீடல்ல காதல் முறையீடு என்று கண்ட அவர்கள் இருவரும் தாமும் தம் அரசியல் கடமைகளை மறந்து கைகொட்டி மகிழ்ந்தனர்.