பிறமொழி இலக்கிய விருந்து -2
<
257
"அஸோஜிரோ, உமக்குக்கிட்டிய 'தண்டனைக்கு' மகிழ்ச்சியடை கிறோம். கடமையால் எங்கள் காதலைக் கடிந்து, எங்களைத் திருத்தினீர். உங்கள் காதலால் உங்கள் கடமையை மனமாரத் திருத்துகிறோம். சென்று மணமகளை அழைத்து வருக. நாங்களே மணமுடித்து வைக்கிறோம்" என்று தலைவன் மகிழ்ச்சி ததும்பக் கூறினான்.
தலைவன் காதலருமை அறிந்தவன். தலைவனின் காதலியோ அஸோஜிரோவின் தூண்டுதலால் கடமை அளவுகோல் கொண்டு காதலை அளந்து பார்த்தவள். இருவரும் அஸோஜி ரோவின் காதலாழத்தை அவன் கடமையுணர்ச்சியின் அளவினாலேயே அளவிட்டுப் பார்த்து வியந்து பாராட்டினர்.
66
'அன்பரே, உமக்காக மட்டுமல்ல. உம்மைப் போன்ற தூய வீரரை ஆட்கொண்ட அந்த அழகு நங்கைக்காகவும் நாங்கள் இம்மணத்தை விரைவில் முடிக்க எண்ணுகிறோம். உம் வீரம் எத்தகைய காதலையும் விலைக்கு வாங்கத்தக்கது. ஆனால் அந்நங்கையின் 'துன்பக்கேணி' எத்தனையோ வீரர்களின் வீரத்தையும் கடந்த ஆழமுடையது. அவள் இன்ப ஊற்றுக்கு இனி எந்த இடையூறும் கூடாது” என்று அவர்கள் மியூகியைப் பாராட்டினர்.
மியூகியின் துன்பக்கேணி இன்பக்கேணியாயிற்று. அவள் பெற்றோர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அரசியல் வாழ்வின் அல்லல்கள் யாவும் மறந்து எல்லோரும் புதுமண விருந்தில் பங்குகொண்டு களித்தனர்.
அஸோஜிரோவையும்
அவன் திட்டங்களையும் எதிர்த்தழிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த இவாசிரோ கூட இப்போது மனமாற்ற மடைந்தான். அஸோஜிரோவின் பண்பில் தன்னைத் தவிர எல்லோரும் ஈடுபடுவது கண்டு அவன் முதன்முதலில் புழுங்கியிருந்தான். புழுக்கம் பொறாமையாக, பொறாமை வஞ்சகமாக, வஞ்சம் பகையாக, பகை பழியாக உருமாறியது. ஆயினும் அவன் வஞ்சம் அவனை வாட்டி வதைத்தது. தான் நஞ்சிட்டுக் கொல்ல எண்ணியதை அறிந்தும், தன் சூழ்ச்சிகளையெல்லாம் உணர்ந்தும், அஸோஜிரோ தன் திட்டங்களைக் குலைத்ததன்றித் தன்னைப் பகைக்காதிருந்த