(258
நயநாகரிகம்
அவன்
அப்பாத்துரையம் - 24
உள்ளத்தைத் தைத்தது. அவன் மணவிழாவிற்கு முன் அஸோஜிரோவின் காலடியில் வீழ்ந்து "தங்கள் வாழ்க்கை நிறையின் போது அதன் சின்னமாக என்னை மன்னித்து, வருங்காலத்தில் நான் ஆற்றும் நட்புக்கடனையும் ஏற்க வேண்டும்" என்று வேண்டினான். பெருந்தன்மைமிக்க அஸோஜிரோவுக்கு இது எளிய, இனிய செயலாயிற்று. அவன் இவாசிரோவையே தன் மணவிழாத் தோழனாகக் கொண்டு, தன் நட்புறுதியைக் காட்டினான். இவாசிரோ உண்மையிலேயே அவன் உயிர் நண்பனானான்.
று
அறத்தாயியின் கும்பல் வலிவுள்ளதாயினும் இவாசிரோ சூழ்ச்சிகளினாலேயே அது நீடித்திருந்தது. அவன் மனமாற்றங் காரணமாக அவர்களிற் பலர் மனமாற்றமும், மற்றும் பலர் தடுமாற்றமும் கொண்டனர். அறத்தாயி தன் குகையில் தானே தனித்து இருந்து நோய்வாய்ப்பட்டு, புதல்வியின் மடியில் கிடந்து மாண்டாள். புதல்வி சிசாட்டோவும் எஞ்சிய செல்வத்துடன் புதிய வாழ்க்கை நடத்தத் தொடங்கினாள். தன்னால் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயர் புகழும் நல்வாழ்வும் கேட்டு அவள் எல்லையில்லாத களிப்பில் மூழ்கினாள். எனவே மியூகி அஸோஜிரோ திருமணம் குடும்ப மணமாக மட்டுமின்றி அரசியல் மணமாகவும் திகழ்ந்தது. காதலை அடக்கி வென்ற கடமையின் வெற்றி போலல்லாமல், கடமையை நிறைவேற்றி வெற்றி பெற்ற அவர்கள் காதலால் அவர்கள் வாழ்க்கைப் பண்பு மிளிர்ந்தோங்கிற்று.
உஜி ஆற்றங்கரையில் அடுத்த இளவேனிற் பருவத்தில் மீண்டும் எப்போதும் போல் மின்மினிகள் தம் மாயக் களியாட்டம் நிகழ்த்தின. அவற்றின் இன்ப ஒளிமணிகளிடையே இப்போது மியூகியின் கண்மணி ஒளிகளும் அஸோஜிரோவின் வீரவாவொளியும் கலந்து ஒளி வீசின. மீண்டும் பூம்படகு மிதந்து சென்றது. ஆனால் அதனைப் படகோட்டிகள் இயக்கவில்லை. கடக மணிந்த கைகள் சிலபோதும், வளையலணிந்த கைகள் சில போதுமாக மாறி மாறி அதனை உகைத்தன. யாழிசையுடன் ப்போது இரண்டு குரல்கள் பின்னி ஒலித்தன. இந்த ன்பக்காட்சிகளைக் கண்டு களிக்கும் கண்களும் இப்போது இரண்டல்ல, நான்கு.