உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(259

அவர்கள் காதல் வாழ்வின் மாலைப்போது இப்போது அவர்கள் நறுமணவாழ்வின் காலைப் போதாயிற்று. காலை அழகுப் பாட்டு அதைக் குறித்துக் காட்டுவது போலத் தென்றலில் கலந்து, பாலமுகப்பில் மோதி மெல்லென எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அவன்: கண்கவரும் காலை அழகுவெள் ளொளியினிலே அவள்: நுண்பனித் துளிகளெலாம் சுடரிடு கின்றனவே அவன்: நுண்பனித்துளிகளெலாம் வெங்கதிரோன் சாடாமே அவள்: நண்பினொடு மழைபொழிய வாராயோ நன் முகிலே! இருவரும்: ஒண்பவழ மலர்தழைப்ப வாராயோ தண் முகிலே! அஸோஜிரோவின் முதற்பாடலை உடனிருந்து கேட்டின்புற்ற இளந்துறவி இப்போது ஜப்பானியப் பேரரசர் அவையில் முதல் மதகுருவாயிருந்தான். அவன் காதலர் திருமண வாழ்வை வாழ்த்தி ஓர் இன்பப் பாடல் வரைந்து அனுப்பி யிருந்தான். புத்தர் பிரானின் பேரின்ப வாழ்வில் ஈடுபட்ட அந்த அருட்காதலன் பாடல் அவர்கள் தூய காதலின்பத்துக்கு ஒப்பற்ற அன்பளிப்பாயிருந்தது. அதன் இறுதி அடிகள்,

“புத்தர் அடித்தலத்தில்

நித்தம் தருமமுடன் மொய்த்த மெய்ச் சங்கமென

ஒத்து வாழ்வீர்!

வாழ்க புத்தர்

வாழ்க தருமம் வாழ்க சங்கம்’

99

என்று அவர்களை வாழ்த்தின. புத்தர் சரணங்களில் தருமசக்கரமும் சங்கத்தின் சின்னமும் இணைந்து நின்று காதலர்களுக்கு வழிகாட்டி வாழ்த்துக் கூறுவது போலிருந்தது. இன்னா செய்தாரை இனியனவே செய்து வெல்லுஞ் சால்புடை அண்ணலும், இன்னலெனும் புயலிடையே மின்னலெனும் காதலொளியாய் விளங்கிய நங்கையும் இன்பப்பயிர் தழைய இனிது வாழ்ந்திருந்தனர்.