பிறமொழி இலக்கிய விருந்து -2
(281
அமைதியே இயற்கையின் உயிர்: நேர்மை வாழ்வின் உயிர்நிலை. இரண்டும் சேர்ந்ததே உலகின் ஒழுங்கு. அகப்பண்புகள் இந்நேர்மையுடன் ஒத்து நின்றால். உயிர் வளர்ச்சிபெறும். அதனுடன் முரணினால், அழிவுநோக்கிச் சென்று அலமரும். அமைதி, ஒழுங்கு ஆகியவற்றின் முழுநிறை தொகுதியே கடவுள். அதற்கு வழிகாட்டும் நேர்மையைக் கடவுள் நெறி அல்லது சமயம். உள்ளப் பண்புகளும் அப்பண்புகளின் நல்லிசைவும் இவ்வழியில் உள்ளத்தை உய்க்கும் ஆற்றல்களே.
உள்ளத்தின் கருத்துக்களை ஒருவன் பிறரிடமிருந்தும் மறைக்கலாம். தன்னிடமிருந்துங்கூட மறைக்கலாம். ஆனால் அது வாழ்வில் மறைந்திராது. அது கட்டாயம் செயலாக உருவாகித் தீரும். செயலிலிருந்தே ஒருவன் உள்ளத்தின் கருத்தமைதிகளை ஆராய்ந்து அதனை உலகின் ஒழுங்கினுடன் இணைக்க முடியும். புற உலகில் இயற்கை தன் அமைதியைத் தானே காக்கிறது. இயற்கையின் ஒரு பகுதி அவ்வியற்கை அமைதியை மீறினால், அடுத்த பகுதியிலும் அமைதி மீறப்படும். ஆனால் அக்குழப்பத் தால் மீண்டும் அமைதி ஏற்பட வழி பிறக்கிறது. எனவே இயற்கையில் நாம் "குழப்பம்" என்று கூறும் நிலைகள்கூடக் குலைந்த அமைதியின் சரியீடேயன்றி வேறல்ல.
எனவே, மனிதன் அகப்பண்புகள் இயற்கையின் புறப்பண்பு களுக்கு ஒத்திராவிட்டாலும், இயற்கை அதிலும் ஒப்பீட்டைச் செய்தே தீரும். அகப் பண்புகளுக்கேற்ற புறப்பண்புகளை அது மாற்றியமைத்து, அகத்தின் மாறுதல் அல்லது வளர்ச்சிப் பண்பை அதாவது உயிர்ப்பண்பை நலிவிக்கும். இந்நிலை ஏற்பட்டால், அறிவுப் பண்புடையவர் புறச் சூழலமைதியறிந்து அதனை அகப்பண்புகளின்மூலம் இயக்க வேண்டும். உயிர்கள் யாவுமே இப்பண்புக்குரியவை. அறிவுடை உயிராகிய மனிதன் இங்ஙனம் மற்ற உயிர்களின் செயல்தாண்டி இயற்கையை இயக்க முடியும்.
தீய கருத்துக்கள் தீய பழக்கங்களையும் நற்கருத்துக்கள் நல்ல பழக்கங்களையும் படியவைக்கும். பேரூண், மயக்கக் குடி, மட்டிலின்ப நுகர்வு ஆகியவை முன்னைய வகை சார்ந்தவை. இவற்றால் உடல்நலிவு, நோய், இளமையில் முதுமை ஆகியவை வந்தெய்தும். மேலும் வை மனிதன் பிறருடன் கொள்ள வேண்டிய அன்புப் பாச இணைப்பைக் கெடுத்து, வெறுப்புச்