பிறமொழி இலக்கிய விருந்து -2
307
உணர்தல் இன்னும் அரிது. இவை இரண்டையும்விட அவர்கள் அறிவுப்புலனுக்கு அப்பாற்பட்டவை ஆக்கச் செயல்கள், அறிவாள் ர் வெற்றிகளுக்கு மூலகாரணமான அவர் கனவார்வங்கள். வெற்றி என்னும் இன்ப இலக்கைக் கண்டு அழுக்காறுகொண்டு அதைக் குருட்டுயோகம். தற்செயல் நிகழ்ச்சி என்பவர் அதனைச் சென்றடைவதற்குரிய நீடித்த பயணத்தின் கடுந்தொல்லைகளைக் கவனிப்பதில்லை. பிறரிடம் அவர்கள் கற்பிக்கும் குருட்டுயோகம் அவர்கள் அறியாமையின் நிழலேயாகும். முயற்சியின்றி அதன் பயனாகிய திரு. அதாவது செல்வமும் திறமைகளும் பண்புகளும் கைவரமாட்டா. வரம் பெற்றவர், தெய்வ அருள் திறம் பெற்றவர் என ஒருவரைக் கருதுவதும் இதே அறியாமடமையின் மற்றொரு கூறேயாகும். தெய்வ அருள்திறம் என்பது புறத்தேயிருந்து புறத்தெய்வம் எதுவும் அருளிய திறம் அன்று. கனவார்வம், இலக்கு ஆகிய தெய்வீக ஆற்றல்கள் உள்நின்று அருளிய திறங்கள் மட்டுமே.
கட்டடத்தின் அடிப்படை நிலத்தின் கீழுள்ளது. செடியின் வாழ்வின் அடிப்படை ஆதாரம் நிலத்தின் கீழுள்ளது.அதுபோல மனித வாழ்வின் ஆதாரமும் புறப்பொருள் எதிலும் இல்லை. அகத்தேயுள்ள அழகொளியில், நெஞ்சத்தின் நெஞ்சத்தின் ஆழ்ந்த குறிக்கோளிலேயே அதனைக் காணலாம்.
இது விவிலிய நூலுரை. இத்துடன் “எழுமின், விழுமின், விரும்பிய நலங்களைப் பெற்று வாழுமின்" (உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோததி என்னும் கடோரிபரிடத உரையையும் எண்ணியார் எண்ணியாங் கெய்துப, எண்ணியார் திண்ணியராகப் பெறின்" என்ற தமிழ்ப் பொய்யா மொழி உரையும் ஒப்பிட்டுக் காண்க.
66