உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




306

அப்பாத்துரையம் - 24

காத்திருந்தது. கணக்கன் தொழிலுக்கு மட்டுமன்றி அத்தகுதிக்கும் சின்னமான எழுதுகோல் இன்னும் அவன் காதைவிட்டு அகல வில்லை. அதை எடுக்காமலேயே அவன் மக்களிடையே செல்கிறான். அவர்கள் நடுவில் சென்று அவன் தன் கனவார் வங்களை அவர்கள்முன் கொட்டுகிறான். கூட்டல் கழித்தல் பயின்ற நாக்குக்கு எங்கிருந்தோ சொல்லாற்றலும் கலையாற்றலும் வந்துவிடுகிறது.கனவாற்றல் நாவையும் உள்ளத்தையும் முன்னமே பயிற்று வித்திருந்தது.

“நாட்டுப்புறத்தில் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் நாட்டுப்புற ஆடையிலேயே நகரத்துக்குச் செல்கின்றான். நகர்க் காட்சி களிடையே எப்படியோ ஒரு கலைக்கூடம் மட்டும் அவன் கல்லா உள்ளத்தைக் கவர்ந்துவிடுகிறது. கலை ஆசானும் என்ன கண்டோ, கருதியோ அவனை ஏற்றுக்கொள்கிறான். ஒருசில நாட்களுக்குள் ஆசிரியர் அவனிடம் அன்புடனும் நன்மதிப் புடனும் ‘அன்பனே, உனக்கு இனி கலைத்துறையில் நான் கற்றுத் தர வேண்டியது எதுவுமில்லை.நீ இப்போது தானே ஓர் ஆசானாய் விட்டாய். வாழ்க உன் கலை.” என்கிறான். ஆசான் முதியவனாய் விட்டதால் ஆசான் கலைக்கூடத்தில் அவனே ஆசானாகிறான்.பழைய ஆசான் புகழுக்குப் புதிய ஆசான் புகழ் புது விளக்கமும் புது ஆற்றலும் தருகிறது.” இங்ஙனம் ஆடு மேய்க்கும்போது கண்ட கனவார்வமே அவனை நகருக்கு இழுத்துத் தன் புறஉள்ளத்துக்கும் கூடத் தெரியாத வகையில் அவன் அக்கனவை மெய்யாக்கிற்று.

பொருளை உணரமாட்டாது பொருளின் நிழலைப் பொருளாகக் கொள்ளும் அறிவிலிகள் உண்டு. அறிவும் ஆராய்ச்சியும் முயற்சியும் அற்ற இத்தகைய பேடியர்களே செல்வரின் செல்வங் கண்டு குருட்டுயோகம் என்றும் தற்செயல் நிகழ்ச்சி என்றும் கூறுவர். அறிவு மேம்பாடுற்றவரைக் கண்டு ‘ஆ, செல்வாக்கின் பயன் இது' என்று கூறுபவரும் இத்தகையரே. ஏனெனில் அந்தச் செல்வத்தையும் அந்த அறிவையும் பெற்றவர் அவற்றுக்காக என்னென்ன பாடுபட்டனர். எவ்வளவு வு கடுஉழைப்புச் செய்தனர் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். டர்களை எதிர்த்துப் போராட அவர்கள் செய்த தன் மறுப்பு, விட்டுக்கொடுப்பு, தன்னடக்கம் ஆகியவற்றை இத்தகையோர்