பிறமொழி இலக்கிய விருந்து -2
305
மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், உன் கனவுகள் உன் வாழ்வின், உலகவாழ்வின் எல்லைக்கோட்டில் நின்று மிளிரத் தாடங்குகின்றன. சிறு குடிலிலிருந்துகொண்டே உன் உள்ளம் அகன்ற வானவெளியில் உலவுகிறது! கந்தலாடையால் தன்னைப் போர்த்திக்கொண்டே நீ வானவில்லின் வண்ணங்களில் எண்ணங்களை இழைப்பாய்! இந்நிலையில் வறுமையும் சோர்வும் உன்னை வாட்டமறுத்துவிடும். கடுஉழைப்பு எளிய உழைப்பு ஆகிறது. அதனிடையே உன் சிந்தனை ஊர்தி சேணுற ஓங்கி முகில்களிடையே தவழ்ந்து செல்கிறது. உழைப்பு இன்பகரமாய், அதன் சிறுபயன் திரள்பயனாய் பெருகுகிறது. உழைப்புக்கிடமான ஆலையின் பட்டடையுள் இந்நிலையில் நீ நெடுநாள் அடங்கி யிருக்கமாட்டாய்! உன் பண்பாட்டுக் கொவ்வாத அப்புறச்சூழல் இற்றுப்போன சட்டையாய் கழன்றுவிடும். உள்நின்று வளரும் பாம்பின் புத்துடல்போல் புது வளர்ச்சி, புதுச்சூழல் உன்னை வந்து அடையும் பட்டடைத் தொழிலாளியாகிய நீ பாரில் கலைத்தொழிலாளனாக மாறுவாய்.
உன் கனவுகள் எப்போதும் முற்றிலும் பொன் வண்ணக் கனவுகளாயிராமற் போகலாம். அதன் பொன்னுடன் மாசு கலந்திருக்கலாம். ஆனால் அதன் பொன்னும் மாசும் உன் சூழல்களில் ஏற்படுத்தும் மாற்றத்திலும் நீ அதைப் பொன் வண்ணத்தையும் மாசுவண்ணத்தையும் தெளிவாகக் காணலாம். அக்கலவைக் கூறுகளறிந்து நீ உன் கனவுகளைத் தூய்மை யாக்கலாம், கனவின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப உன் வாழ்வும் உயரவும் தாழவும் செய்யும். சிற்றவாக்களுக்கு நீ இடங்கொடுத் தால் அவற்றின் சிறுமைக்குள் நீயும் உன் வாழ்வும் சிறைப்பட நேரிடும். பாரிய அவாக்களுக்கு இடமளித்தால் அவற்றின் பாரிய அகலத்தில் உன்வாழ்வு பரந்துலவும்.
அகப்பண்பின் மாறுதல் புறப்பண்பை எங்ஙனம் எதிர்பாரா வகையில் மாற்றக்கூடும் என்பதைக் கிர்க்கம் டேவிஸ் என்ற பெரியார் சுட்டிக்காட்டுகிறார். "கணக்கெழுதும் ஒருவனுக்குக் கணக்கேடும் அலுவலக அறை வாயிலுமே நிலையான உலக எல்லையாகத் தோன்றுவது இயல்பு. ஆனால் ஒருநாள் குறிப்பிட்ட கணக்கன் அவ்வாயில் கடந்ததும் அவனுக்குப் பொதுமக்களின் ஒரு பெரிய கூட்டம் வரவேற்பளிக்கக்