உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




304

அப்பாத்துரையம் - 24

உலகத்தின் மாபெரிய நீள்செயல்கள் யாவுமே தொடக்கத்தில் கனவாய்த்தான் இருந்தன. - கனவின் கருவிலேயே சிலநாள் தங்கியிருந்து விளைவுற்றன. வானகத்தே கிளையளாவி நிலத் தகத்தே ஆழ்ந்து வேரூன்றி வளரும் ஆலமரம், தொடக்கத்தில் மண்ணகத்தே சிறு மீன் சினையளவான ஆலவிதையினுள்ளேயே இருந்தது. அதுபோல கனவில் தங்கியிருந்த ஆற்றல் நனவில் முதிர்ந்து பின் வளர்ச்சி பெறுகிறது. எனவே கனவுகள் மாயப் போலித் தோற்றங்களோ, செயல் தொடர்பற்ற மின்மினிகளோ அல்ல. அவை மெய்ம்மையின் வித்துக்கள், வெற்றியின் கருவூலங்கள், நாகரிகத்தின் ஆக்கத்துறைப் போர்க்கருவிகள்!

மனித

உன் சூழல்வளி தொடக்கத்தில் உனக்குச் சாதகமற்றதாக இருக்கலாம். ஆனால் நீ ஒரு குறிக்கோள் வழிநின்று கனவுகாண முனைந்தால், அது உனக்கெதிராக நீடித்து நிற்கமாட்டாது. அகத்தே கனவில் உலவும் நீ புறத்தே சும்மா கைகட்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. முனைந்து செயலாற்றுவது உறுதி.

நீ வறுமை, கடுஉழைப்பு ஆகியவற்றால் கடுந்துயருழக்கும் தொழிலாளியாயிருக்கலாம். உடல் நலத்துக்கு ஒவ்வாத ஆலைக்கிடங்கில் கிடந்து ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவதியுறுபவனாயிருக்கலாம். கல்விப் பயிற்சியின் நலனுக்கோ, கலைப்பண்பின் நலத்துக்கோ, உன் வாழ்வில் வாய்ப்பில்லாது போகலாம். ஆனால் நீ மட்டும் ஒரு நல்வாழ்வுக் கனவை இவ்வெதிர் சூழ்நிலைகளிடையேயும் சுமந்துலவினால், அறிவு, பண்பு நயம், அழகு நயம் ஆகியவற்றின் அவாக்களை உன் உள்ளக்கருவில் அடக்கிக்கொண்டு செயலாற்றினால், அக்கனவுகளும் அவாக்களுமே உன்னை உள்நின்று இயக்கி, உன் வாழ்வை நீயறியாமலே மாற்றிவிடும். அக்கனவுகள் உன் சிறு வருவாயின் ஒரு சிறுபகுதியை உன் வருங்கால வாழ்வின் செல்வத்துக்குரிய விதையாக்கிவிடும். உன் கடு உழைப்பிடையே நீ அரிதிற்பெறும் ஓய்வின் ஒரு சிறு பகுதியை அவை அப்பயிர் வளர்வதற்கான நீராகவும் உரமாகவும் மாற்றியமைத்துவிடும்.

கனவுகளால் ஏற்பட்ட இப்புறச்சூழல் மாறுபாடு பின்னும் கனவை ஒருபுறமும் அதன் வாயிலாகச் சூழலை மற்றொருபுறமும்